போட்டி தேர்வு எழுதும் மாணவர்கள் தன்னம்பிக்கையுடன் இருந்தால் எளிதில் வெற்றி பெற முடியும் ஐ.ஏ.எஸ். அதிகாரி பேச்சு
போட்டி தேர்வு எழுதும் மாணவர்கள் தன்னம்பிக்கையுடன் இருந்தால் மட்டுமே எளிதில் வெற்றி பெற முடியும் என்று ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆனந்தகுமார் கூறினார்.
தர்மபுரி,
தர்மபுரி ஜெய்குருதேவ் டி.என்.பி.எஸ்.சி. பயிற்சி மையத்தில் பயின்று டி.என்.பி.எஸ்.சி. மற்றும் பல்வேறு போட்டி தேர்வுகளில் ஏராளமானவர்கள் வெற்றி பெற்று அரசின் பல்வேறு துறைகளில் பணியில் சேர்ந்துள்ளனர். இந்த சாதனை படைத்த பயிற்சி மையத்தின் மாணவர்கள் மற்றும் அவர்களின் பயிற்றுனர்களுக்கு பாராட்டு விழா தர்மபுரி டி.என்.சி. விஜய் மஹாலில் நடைபெற்றது. விழாவிற்கு தமிழ்நாடு அரசு நிதித்துறை சிறப்பு செயலாளரும், தர்மபுரி மற்றும் ஈரோடு மாவட்ட முன்னாள் கலெக்டருமான டாக்டர் ஆனந்தகுமார் தலைமை தாங்கினார். தேனி துணை கலெக்டர் சக்திவேல் முன்னிலை வகித்தார். வேலூர் மாவட்ட உள்ளாட்சி நிதித்தணிக்கை ஆய்வாளர் ஆறுமுகம் வரவேற்று பேசினார்.
அரசின் பல்வேறு பணிகளில் சேர்ந்த ஜெய்குருதேவ் டி.என்.பி.எஸ்.சி. பயிற்சி மையத்தின் முன்னாள் மாணவர்கள் மற்றும் அவர்களின் பயிற்றுனர்களுக்கு ஐ.ஏ.எஸ். அதிகாரி டாக்டர் ஆனந்தகுமார் நினைவு பரிசு வழங்கி பேசினார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பயிற்சி மைய மாணவ, மாணவிகளின் பல்வேறு சந்தேகங்களுக்கு அவர் பதில் அளித்தார்.
அப்போது அவர் பேசுகையில், போட்டி தேர்வு எழுதும் மாணவ, மாணவிகள் தன்னம்பிக்கையுடன் இருந்தால் மட்டுமே எளிதில் வெற்றி பெற முடியும். போட்டி தேர்வு எழுதும் மாணவர்களை அவரது பெற்றோரும் ஊக்கப்படுத்த வேண்டும். ஒரு மனிதன் வெற்றி பெறுவதற்கு மொழி ஒரு காரணமாக இருக்க கூடாது. எந்த மொழியாக இருந்தாலும் சாதனை படைக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் மட்டுமே சாதிக்க முடியும் என்று பேசினார்.
இதில் திருவண்ணாமலை மாவட்ட வேளாண்மை உதவி இயக்குனர் தாமோதரன், பல்வேறு துறைகளில் பணிபுரியும் அரசு அலுவலர்கள் பயிற்சி மைய மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். முடிவில் சேலம் மாநகராட்சி தணிக்கை ஆய்வாளர் சுரேஷ்குமார் நன்றி கூறினார். விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் ஜெய்குருதேவ் பயிற்சி மையத்தின் சார்பில் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

Related Tags :
Next Story