திருச்செந்தூர் அருகே அரசு பஸ்- மோட்டார் சைக்கிள் மோதல்; தொழிலாளி பலி
திருச்செந்தூர் அருகே அரசு பஸ், மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் வாலிபர் ஒருவர் பரிதாபமாக உயிர் இழந்தார்.
திருச்செந்தூர்,
திருச்செந்தூர் அருகே உள்ள தளவாய்புரம் வன்னியங்காடு பகுதியை சேர்ந்தவர் உதயக்குமார். இவரின் மகன் முத்துவிஜய் (வயது 19). இவர் தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். நேற்று மதியம் இவர் தனது மோட்டார் சைக்கிளில் காயாமொழிக்கு வந்து விட்டு மீண்டும் அங்கு இருந்து வீட்டுக்கு வந்து கொண்டு இருந்தார். மோட்டார் சைக்கிள் தளவாய்புரம் வளைவில் சென்ற போது, திருச்செந்தூரில் இருந்து கன்னியாகுமரி நோக்கி சென்ற அரசு பஸ் மீது மோட்டார் சைக்கிள் பயங்கரமாக மோதியது.
இதில் மோட்டார் சைக் கிளை ஓட்டி சென்ற முத்து விஜய் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு திருச்செந்தூர் அரசுஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் போகும் வழியிலேயே அவர் உயிர் இழந்தார். இந்த சம்பவம் குறித்து திருச்செந்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்து நடந்த இடத்தில் வாகனங்கள் அதிவேகமாக செல்வதால் அடிக்கடி இதுபோன்ற விபத்துகள் நடப்பதாகவும், எனவே அங்கு வேகத்தடை அமைக்க வேண்டும் என்றும் இந்த பகுதி மக்கள் கோரிக்கை வைத்து உள்ளனர்.
Related Tags :
Next Story