நாசிக் அருகே ஓடும் ரெயிலின் சக்கரம் உடைந்தது பெரும் விபத்து தவிர்ப்பு


நாசிக் அருகே ஓடும் ரெயிலின் சக்கரம் உடைந்தது பெரும் விபத்து தவிர்ப்பு
x
தினத்தந்தி 3 Jun 2019 5:00 AM IST (Updated: 3 Jun 2019 3:58 AM IST)
t-max-icont-min-icon

நாசிக் அருகே ஓடும் ரெயிலின் சக்கரம் உடைந்தது. அதிர்ஷ்டவசமாக பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

மும்பை, 

நாசிக் அருகே ஓடும் ரெயிலின் சக்கரம் உடைந்தது. அதிர்ஷ்டவசமாக பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

கோடை கால சிறப்பு ரெயில்

பீகார் மாநிலம் பரவுனியில் இருந்து மும்பை குர்லா டெர்மினஸ் நோக்கி கோடைகால சிறப்பு ரெயில் வந்து கொண்டிருந்தது. அந்த ரெயில் நேற்று காலை நாசிக் மாவட்டம் மன்மாட் ரெயில் நிலையத்தை நெருங்கியபோது, ஒரு பெட்டியின் கீழே திடீரென பயங்கர சத்தம்கேட்டது.

இதனால் பதறிப்போன பயணிகள் ஏதோ விபரீதம் நடந்ததை உணர்ந்து அலறினார்கள். உடனடியாக அந்த ரெயில் நிறுத்தப்பட்டது.

சக்கரம் உடைந்தது

இந்தநிலையில், அந்த பெட்டியில் இருந்த பயணிகள் கீழே இறங்கி பார்த்தனர். அப்போது, அந்த பெட்டியின் கீழ் உள்ள ஒரு சக்கரம் உடைந்து போய் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதன் காரணமாக தான் சத்தம்கேட்டது தெரியவந்தது. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் ரெயில் தடம் புரளவில்லை. இதன் காரணமாக பயணிகள் காயமின்றி உயிர் தப்பினார்கள்.

பயணிகள் அவதி

தகவல் அறிந்து ரெயில்வே அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் ரெயிலில் இருந்து அந்த பெட்டி பிரிக்கப்பட்டது. இதையடுத்து மாற்று பெட்டி கொண்டு வரப்பட்டு இணைக்கப்பட்டது. அதன்பின்னர் சுமார் 3 மணி நேரம் தாமதமாக அந்த ரெயில் மும்பை நோக்கி புறப்பட்டு வந்தது. இந்த சம்பவத்தின் காரணமாக அந்த வழித்தடத்தில் வந்து கொண்டிருந்த 5 நீண்ட தூரரெயில்கள் ஆங்காங்கே நடுவழியில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. அந்த ரெயிலில் இருந்த பயணிகளும் கடும் அவதிக்குள்ளானார்கள்.

ரெயில் சக்கரம் உடைந்ததும் உடனடியாக ரெயில் நிறுத்தப்பட்டதால் பெரும் விபத்து தவிக்கப்பட்டதாக ரெயில்வே போலீசார் தெரிவித்தனர்.

Next Story