செங்கல்பட்டில் கருணாநிதி பிறந்த நாள் விழா கொண்டாட்டம்


செங்கல்பட்டில் கருணாநிதி பிறந்த நாள் விழா கொண்டாட்டம்
x
தினத்தந்தி 4 Jun 2019 5:00 AM IST (Updated: 4 Jun 2019 5:41 AM IST)
t-max-icont-min-icon

காஞ்சீபுரம் மாவட்டம் செங்கல்பட்டை அடுத்த சிங்கப்பெருமாள் கோவில் பஜார் வீதியில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. தி.மு.க. ஊராட்சி கழக செயலாளர் கே.பி.ராஜன் தலைமை தாங்கினார்.

செங்கல்பட்டு,

காட்டாங்கொளத்தூர் ஒன்றிய இளைஞர் அணி துணை அமைப்பாளர் கே.ஆர்.சி.ஜெ.ரத்தீஷ், ஒன்றிய பிரதிநிதி சேரமான், மாவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளர் கலைவாணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளராக ஒன்றிய செயலாளர் எம்.கே.தண்டபாணி கலந்துகொண்டு அன்னதானம் வழங்கினார். நிகழ்ச்சியில் மகளிர் அணி அமைப்பாளர் சாந்தி, திருத்தேரி கங்காதரன், முன்னாள் வார்டு உறுப்பினர் குமரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இதே போல ஒரகடம் சென்னக்குப்பம் பகுதியில் குன்றத்தூர் ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் சிலம்புச்செல்வன் தலைமையில் கட்சிக்கொடியேற்றப்பட்டு அன்னதானம் வழங்கப்பட்டது.


Next Story