ஓசூர் நகராட்சியில் பெண்கள் போட்டியிடும் 23 வார்டுகள் விவரம் ஆணையாளர் தகவல்
ஓசூர் நகராட்சியில் பெண்கள் போட்டியிடும் 23 வார்டுகள் விவரத்தை நகராட்சி ஆணையாளர் பாலசுப்பிரமணியன் அறிவித்துள்ளார்.
ஓசூர்,
தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. ஓசூர் நகராட்சியில் மொத்தம் 45 வார்டுகள் உள்ளன. இதில் 23 வார்டுகளில் பெண்கள் போட்டியிடவும், 22 வார்டுகளில் ஆண்கள் போட்டியிடும் வகையில் 50 சதவீதம் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
ஓசூர் நகராட்சியில் பெண்கள் போட்டியிடும் வார்டுகள் எவை என்ற விவரப்பட்டியல் அரசாணையில் வெளியிடப்பட்டுள்ளது. 2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி வார்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓசூர் நகராட்சியில் பெண்கள் போட்டியிடும் வார்டுகள் விவரம் வருமாறு:-
பெண்கள் (பொது) போட்டியிடும் வார்டுகள்:- 6,11,12,13,15,16,24,25,26,29,30,31,32,33,34,35,38,39,40,43,45. இந்த 21 வார்டுகளிலும் பெண்கள் (பொது) போட்டியிடலாம்.
அதே போல தாழ்த்தப்பட்டோர் (பெண்கள்) 36, 44 வார்டுகளில் போட்டியிடலாம். மேலும் வார்டுகள் 9, 21 ஆகியவற்றில் தாழ்த்தப்பட்டோர் (பொது) போட்டியிட முடியும். இதைத் தவிர மற்ற 20 வார்டுகளிலும் ஆண்கள் போட்டியிட முடியும். நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் 50 சதவீதம் போட்டியிடும் வகையில் வார்டுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ஓசூர் நகராட்சி ஆணையாளர் கே.பாலசுப்பிரமணியன் தெரிவித்தார்.
Related Tags :
Next Story