பாப்பாரப்பட்டி அருகே மோட்டார் சைக்கிளை திருடிச்சென்ற 3 பேர் கைது


பாப்பாரப்பட்டி அருகே மோட்டார் சைக்கிளை திருடிச்சென்ற 3 பேர் கைது
x
தினத்தந்தி 4 Jun 2019 4:15 AM IST (Updated: 4 Jun 2019 12:51 AM IST)
t-max-icont-min-icon

பாப்பாரப்பட்டி அருகே மோட்டார் சைக்கிளை திருடிச்சென்ற 3 பேர் கைது பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

பாப்பாரப்பட்டி,

தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியை சேர்ந்தவர் கேசவன் (வயது42), ஓட்டல் தொழிலாளி. இவர் நேற்று பாப்பாரப்பட்டியில் உள்ள மின்வாரிய அலுவலகம் அருகில் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு கடைக்கு சென்றார். பின்னர் திரும்பி வந்த போது மோட்டார் சைக்கிளை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் பல்வேறு இடங்களில் தேடினார். அப்போது 3 பேர் மோட்டார் சைக்கிளை திருடிச்சென்றது தெரியவந்தது. இதையடுத்து கேசவன் மற்றும் பொதுமக்கள் அந்த 3 பேரையும் சுற்றி வளைத்து பிடித்து பாப்பாரப்பட்டி போலீசில் ஒப்படைத்தனர். அந்த 3 பேரிடமும், போலீஸ் இன்ஸ்பெக்டர் துரைராஜ் விசாரணை நடத்தி வருகிறார். முதல் கட்ட விசாரணையில் அவர்கள் 3 பேரும் தர்மபுரி பகுதியை சேர்ந்தவர்கள் என்பதும், பல்வேறு இடங்களில் மோட்டார் சைக்கிள்கள் திருடியதும் தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story