நகராட்சி வார்டுகளின் இடஒதுக்கீட்டு பட்டியலில் யார்-யாருக்கு எந்த வார்டுகள்? தமிழக அரசாணையில் தகவல்


நகராட்சி வார்டுகளின் இடஒதுக்கீட்டு பட்டியலில் யார்-யாருக்கு எந்த வார்டுகள்? தமிழக அரசாணையில் தகவல்
x
தினத்தந்தி 4 Jun 2019 4:00 AM IST (Updated: 4 Jun 2019 2:58 AM IST)
t-max-icont-min-icon

காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள நகராட்சி வார்டுகளின் இடஒதுக்கீட்டு பட்டியலில் யார்-யாருக்கு எந்த வார்டுகள்? என்ற விவரம் தமிழக அரசு அரசாணையில் வெளியிடப்பட்டு உள்ளது.

சென்னை,

உள்ளாட்சி தேர்தலுக்கான இடஒதுக்கீடு பட்டியலை தமிழக அரசு நேற்று முன்தினம் வெளியிட்டது.

இதில், காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள நகராட்சிகளில் யார்-யாருக்கு எந்தெந்த வார்டுகள்? என்ற விவரம் அறிவிக்கப்பட்டு உள்ளது.

அனகாபுத்தூர்

காஞ்சீபுரம் மாவட்டம் அனகாபுத்தூர் நகராட்சி:- மொத்தம் 18 வார்டுகள். 9 வார்டுகள் பெண்களுக்கு ஒதுக்கீடு. அதில் தாழ்த்தப்பட்ட பெண்களுக்கு 17, 18, பொதுப்பிரிவு பெண்களுக்கு 1, 2, 9, 10, 12, 13, 14. மேலும் 16-வது வார்டு தாழ்த்தப்பட்டவர்களுக்கு ஒதுக்கீடு.

பல்லாவரம் நகராட்சி:- மொத்தம் 42 வார்டுகள். 21 வார்டுகள் பெண்களுக்கு ஒதுக்கீடு. அதில் தாழ்த்தப்பட்ட பெண்களுக்கு 2, 4, 5, 16 மற்றும் பொதுப்பிரிவு பெண்களுக்கு 1, 11, 12, 15, 19, 22, 24, 25, 26, 30, 31, 32, 34, 36, 37, 38, 40 ஆகிய வார்டுகள். 7, 9, 21-வது வார்டுகள் தாழ்த்தப்பட்டவர்களுக்கு ஒதுக்கீடு.

பம்மல் நகராட்சி:- மொத்தம் 21 வார்டுகள். 11 வார்டுகள் பெண்களுக்கு ஒதுக்கீடு. அதில் தாழ்த்தப்பட்ட பெண்களுக்கு 13, 21 மற்றும் பொதுப்பிரிவு பெண்களுக்கு 1, 2, 3, 4, 6, 8, 11, 18, 19. மேலும் 9, 20-வது வார்டுகள் தாழ்த்தப்பட்டவர்களுக்கு ஒதுக்கீடு.

தாம்பரம், செம்பாக்கம்

செம்பாக்கம் நகராட்சி:- மொத்தம் 15 வார்டுகள். 8 வார்டுகள் பெண்களுக்கு ஒதுக்கீடு. அதில் தாழ்த்தப்பட்ட பெண்களுக்கு 10 மற்றும் பொதுப்பிரிவு பெண்களுக்கு 1, 2, 3, 5, 6, 7, 13.

தாம்பரம் நகராட்சியில் மொத்தம் 39 வார்டுகள். 20 வார்டுகள் பெண்களுக்கு ஒதுக்கீடு. அதில் தாழ்த்தப்பட்ட பெண்களுக்கு 24, 31, 32 மற்றும் பொதுப்பிரிவு பெண்களுக்கு 4, 5, 6, 8, 9, 10, 13, 15, 16, 18, 19, 20, 28, 29, 30, 37, 39. மேலும், 2, 27, 35-வது வார்டுகள் தாழ்த்தப்பட்டவர்களுக்கு ஒதுக்கீடு.

ஆவடி

ஆவடி நகராட்சி:- மொத்தம் 48 வார்டுகள். 24 வார்டுகள் பெண்களுக்கு ஒதுக்கீடு. அதில் தாழ்த்தப்பட்ட பெண்களுக்கு 5, 15, 18, 19 மற்றும் பொதுப்பிரிவு பெண்களுக்கு 6, 7, 11, 12, 16, 17, 20, 22, 26, 34, 35, 36, 38, 39, 41, 43, 44, 45, 46, 47. மேலும் 3, 14, 21, 37-வது வார்டுகள் தாழ்த்தப்பட்டவர்களுக்கு ஒதுக்கீடு.

பூந்தமல்லி நகராட்சி:- மொத்தம் 21 வார்டுகள். 11 வார்டுகள் பெண்களுக்கு ஒதுக்கீடு. அதில் தாழ்த்தப்பட்ட பெண்களுக்கு 4, 12 மற்றும் பொதுப்பிரிவு பெண்களுக்கு 3, 5, 7, 10, 11, 13, 17, 19, 20. 1-வது வார்டு தாழ்த்தப்பட்டவர்களுக்கு ஒதுக்கப்பட்டு உள்ளது.

திருவேற்காடு

திருவேற்காடு நகராட்சி:- மொத்தம் 18 வார்டுகள். 9 வார்டுகள் பெண்களுக்கு ஒதுக்கீடு. அதில் தாழ்த்தப்பட்ட பெண்களுக்கு 6, 7 மற்றும் பொதுப்பிரிவு பெண்களுக்கு 1, 2, 10, 12, 13, 14, 16. மேலும், 5, 18-வது வார்டுகள் தாழ்த்தப்பட்டவர்களுக்கும் ஒதுக்கீடு

மீதமுள்ள வார்டுகள் பொதுப்பிரிவுக்கு ஒதுக்கப்பட்டவையாகும்.

Next Story