கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற பாடுபடுவேன் - நாகராஜன் எம்.எல்.ஏ. பேச்சு
தொகுதி மக்களிடம் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற பாடுபடுவேன் என்று நாகராஜன் எம்.எல்.ஏ. பேசினார்.
இளையான்குடி,
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சட்டமன்ற தொகுதியில் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நாகராஜன் கடந்த 29–ந் தேதி சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்ற பின்பு, தனது தொகுதிக்குட்பட்ட பகுதிகளுக்கு சென்று பொதுமக்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார்.
முதல்கட்டமாக எஸ்.காரைக்குடியில் தொடங்கி தெ.புதுக்கோட்டை பெருமச்சேரி, குறிச்சி, இளமனூர், அன்டக்குடி, வாணி, தெ.கீரனூர், கருஞ்சுத்தி, கொங்கம்பட்டி, அரியாண்டிபுரம், கீழநெட்டூர் வேலடிமடை ஆகிய பகுதிகளில் நன்றி தெரிவித்து பேசினார். இதில் ஒன்றிய செயலாளர் பாரதிராஜன் உள்பட ஒன்றிய கழக நிர்வாகிகள் உடன் சென்றனர்.
அப்போது ஒவ்வொரு ஊர் பொதுமக்களிடமும் தேர்தலின் போது நான் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற பாடுபடுவேன். தொகுதி மக்கள் தங்களின் குறைகளை தயங்காமல் என்னிடம் எப்போது வேண்டுமானாலும் தெரிவிக்கலாம் என்று எம்.எல்.ஏ. பேசினார். மேலும் வாக்களித்த உங்களுக்கு எனது நன்றி தெரிவித்து கொள்வதாகவும், அரசின் நலத்திட்டங்கள் அனைத்து மக்களுக்கும் சென்றடையும் விதமாக பாகுபாடு இன்றி செயலாற்றுவேன் என்றார்.
ஒவ்வொரு கிராமத்திலும் அவருக்கு பொதுமக்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். அப்போது மதிய இடைவேளையின் போது பெருமச்சேரி முன்னாள் ஊராட்சிமன்ற தலைவரும், தற்போதைய நிலவளவங்கி தலைவருமான முருகன், நாகராஜன் எம்.எல்.ஏ. மற்றும் அவருடன் சென்ற கட்சி நிர்வாகிகள் ஆகியோருக்கு உபசரிப்பு நடத்தினார். இதில் முருகன், காரிச்சாமி, ராஜா, சீமைச்சாமி, இமாமுதீன், பிரதீபன், முனீஸ்வரன், செந்தில்குமார், பாலக்கிருஷ்ணன், குமார், நாகராஜன், முனியான்டி, சண்முகம், பாஸ்கரன், உதயசந்திரன், ராமசங்கு, குருசேகரன், ஈஸ்வரன், செல்லத்துரை உள்பட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.