மழைக்கால வெள்ளப்பெருக்கை தடுக்க 303 மோட்டார் பம்புகள் மெட்ரோ ரெயில் பணிகள் நடைபெறும் இடங்களில் ஏற்பாடு
மழைக்காலத்தில் ஏற்படும் வெள்ளப்பெருக்கை தடுக்க மெட்ரோ ரெயில் பணிகள் நடைபெறும் இடங்களில் 303 மோட்டார் பம்புகள் வைக்கப்பட்டுள்ளன.
மும்பை,
மும்பையில் இன்னும் ஒரு வாரத்தில் மழைக்காலம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே மழைக்காலத்தில் ஏற்படும் வெள்ளப்பெருக்கை தடுக்க மாநகராட்சி முழுவீச்சில் செயல்பட்டு வருகிறது. மழைக்கால முன்எச்சரிக்கை பணிகள் ஏறக்குறைய முடிந்துவிட்டதாக மாநகராட்சி தரப்பில் கூறப்படுகிறது.
இந்தநிலையில் மும்பையில் மெட்ரோ ரெயில் திட்டப்பணிகளுக்காக பல்வேறு இடங்களில் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. மழைக்காலத்தின் போது மெட்ரோ ரெயில் திட்டத்துக்காக தோண்டப்பட்ட பள்ளங்கள், சுரங்கங்களாலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பு உள்ளது.
303 மோட்டார் பம்புகள்
இதைத்தடுக்கும் வகையில் மெட்ரோ திட்டப்பணிகள் நடந்து வரும் 27 இடங்களில் 303 ராட்சத மோட்டார் பம்புகள் வைக்கப்பட்டுள்ளது. பள்ளங்களில் தேங்கும் மழைநீரை வெளியேற்ற இந்த பம்புகள் வைக்கப்பட்டுள்ளன.
மேலும் மழைநீர் தேங்கும் அபாயம் உள்ள இடங்களில் கண்காணிப்பு பணியில் ஈடுபட 308 பேர் நியமிக்கப்பட்டுள்ளதாக மும்பை மெட்ரோ ரெயில் கழக (எம்.எம்.ஆர்.சி.எல்) அதிகாரி ஒருவர் கூறினார்.
Related Tags :
Next Story