திருவாரூர் சீதளாதேவி மாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா திரளான பக்தர்கள் தீக்குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடன்


திருவாரூர் சீதளாதேவி மாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா திரளான பக்தர்கள் தீக்குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடன்
x
தினத்தந்தி 4 Jun 2019 10:30 PM GMT (Updated: 4 Jun 2019 6:50 PM GMT)

திருவாரூர் சீதளாதேவி மாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் தீக்குண்டத்தில் இறங்கி நேர்த்திக் கடன் செலுத்தினர்.

திருவாரூர்,

திருவாரூர் காகிதக்காரத்தெருவில் சீதளாதேவி மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் அம்மன் வீதி உலா நடந்தது. மேலும் பக்தர்கள் காவடி, பால்குடம் எடுத்து வந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தீமிதி திருவிழாவில் கோவில் அருகே அமைக்கப்பட்ட தீக்குண்டத்தில் திரளான பக்தர்கள் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். இதில் பலர் தங்களது குழந்தைகளை தோளில் சுமந்து தீமிதித்தனர்.

இதை தொடர்ந்து அக்னி கப்பரை எடுத்தல் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் புஷ்ப பல்லக்கில் அம்மன் வீதிஉலா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அதிகாரி சிவகுமார் மற்றும் பக்தர்கள் செய்து இருந்தனர்.


Next Story