பர்கூர், ஓசூர், தேன்கனிக்கோட்டையில் ஜமாபந்தி தொடங்கியது


பர்கூர், ஓசூர், தேன்கனிக்கோட்டையில் ஜமாபந்தி தொடங்கியது
x
தினத்தந்தி 5 Jun 2019 4:00 AM IST (Updated: 5 Jun 2019 12:59 AM IST)
t-max-icont-min-icon

பர்கூர், ஓசூர், தேன்கனிக்கோட்டையில் ஜமாபந்தி தொடங்கியது.

பர்கூர்,

பர்கூர் தாலுகாவிற்கு உட்பட்ட குட்டூர், பட்லப்பள்ளி, சிகரலப்பள்ளி, ஐகொத்தப்பள்ளி, மஜித்கொல்லஹள்ளி, பர்கூர், மல்லப்பாடி, பர்கூர், மல்லப்பாடி கிராமங்களுக்கான ஜமாபந்தி பர்கூரில் கலெக்டர் பிரபாகர் தலைமையில் நடந்தது. இதில் பொதுமக்கள் முதியோர் உதவி தொகை, பட்டா பெயர் மாற்றம் உள்பட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 246 மனுக்களை கலெக்டரிடம் வழங்கினார்கள். அந்த மனுக்கள் குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க கலெக்டர் பிரபாகர் உத்தரவிட்டார்.

இந்த நிகழ்ச்சியில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ராமமூர்த்தி, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் மகிழ்நன், மாவட்ட வேலைவாய்ப்புத்துறை அலுவலர் கவுரிசங்கர், தலைமை நில அளவையர் சிங்காரவேலு, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சேகர், தாசில்தார் வெங்கடேசன், தனி தாசில்தார் பூவிதன், தலைமையிட துணை தாசில்தார் வடிவேல், மற்றும் வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

ஓசூர் தாலுகா அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தி ஜமாபந்தியை தொடங்கி வைத்து பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றார். நிகழ்ச்சியின்போது, பட்டா மாற்றம், உட்பிரிவு தனிப்பட்டா, முதியோர் உதவித்தொகை, வாரிசு சான்று, மின் இணைப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மொத்தம் 203 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு, மாவட்ட வருவாய் அலுவலர் உத்தரவிட்டார்.

இதில் ஓசூர் தாசில்தார் முத்துப்பாண்டி, துணை தாசில்தார் ரமே‌‌ஷ், மற்றும் வருவாய் ஆய்வாளர்கள், நில அளவையர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர். ஓசூர் தாலுக்காவில் வருகிற 12-ந் தேதி வரை ஜமாபந்தி நடைபெறவுள்ளது.

தேன்கனிக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் நடந்த ஜமாபந்தியில் ஓசூர் உதவி கலெக்டர் விமல்ராஜ் கலந்து கொண்டு பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெற்றார். இதில் பட்டா மாற்றம், வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை மற்றும் நலத்திட்ட உதவிகள் கோரி பொதுமக்கள் 200 மனுக்கள் கொடுத்தனர். இந்த நிகழ்ச்சியில் தாசில்தார் பாலசுந்தரம், துணை தாசில்தார் கோகுல்நாத் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story