உள்ளாட்சி தேர்தல் முன் ஏற்பாடுகள் குறித்து மாநில தேர்தல் ஆணையாளர் கோவையில் ஆலோசனை


உள்ளாட்சி தேர்தல் முன் ஏற்பாடுகள் குறித்து மாநில தேர்தல் ஆணையாளர் கோவையில் ஆலோசனை
x
தினத்தந்தி 5 Jun 2019 4:30 AM IST (Updated: 5 Jun 2019 3:17 AM IST)
t-max-icont-min-icon

உள்ளாட்சி தேர்தல்முன் ஏற்பாடுகள் குறித்து,மாநில தேர்தல்ஆணையாளர்பழனிசாமி கோவையில்அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

கோவை,

தமிழகத்தில்உள்ளாட்சி தேர்தல்ஆகஸ்டு மாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக வரைவு வாக்காளர் பட்டியல் அடுத்த மாதம் வெளியிடப்பட உள்ளது.உள்ளாட்சி தேர்தலில்போட்டியிடுவதற்கான இடஒதுக்கீடுபட்டியலை தமிழகஅரசு வெளியிட்டுள்ளது.

உள்ளாட்சி பதவிகள்அடிப்படையில் தாழ்த்தப்பட்டவர்கள் (பொது), தாழ்த்தப்பட்டவர்கள் (பெண்), பழங்குடியினர் (பொது), பழங்குடியினர் (பெண்கள்), பெண்கள், பொது என்று 6வகையாக பிரிக்கப்பட்டுஇடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் கோவை மாநகராட்சி, 3 நகராட்சிகள், 37 பேரூராட்சிகள், 12 ஊராட்சி ஒன்றியங்கள், 227 ஊராட்சிகள் உள்ளன. கோவை மாவட்டத்தில்உள்ளாட்சி தேர்தல்ஏற்பாடுகள் குறித்து ஆலோசிப்பதற்காகமாநில தேர்தல்ஆணையாளர் பழனிசாமி நேற்று கோவை வந்தார். கலெக்டர் அலுவலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.இந்த கூட்டத்தில்கலெக்டர் ராஜாமணி,மாநகராட்சி கமிஷனர்ஷ்ரவண்குமார்ஜடாவத், மாவட்ட வருவாய் அதிகாரி ராமதுரை முருகன்,மாநகராட்சி துணை கமிஷனர்பிரசன்னா ராமசாமி, ஊரக வளர்ச்சி திட்டமுகமைஇயக்குனர் ரூபன் சங்கர் ராஜா,உள்ளாட்சி தேர்தல்பிரிவு அதிகாரி முத்துகருப்பன் மற்றும் உள்ளாட்சிகளின் செயல் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.கோவை மாவட்டத்தில்உள்ளாட்சி தேர்தல்ஏற்பாடுகள் எவ்வாறு செய்யப்பட்டுள்ளது? எத்தனைவாக்குச்சாவடிகள்அமைக்க வேண்டும்? வாக்குப்பதிவு எந்திரங்கள் தவிர, கிராமப்புறங்களில் ஓட்டுச்சீட்டு மூலம் தேர்தல் நடத்தப்படும் பகுதிகள் எத்தனை? என்பன உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

கூட்டம் முடிந்து வெளியே வந்த, தேர்தல் ஆணையாளர் பழனிசாமி கூறும்போது,முதல்கட்டமாக தேர்தல்ஏற்பாடுகள் மற்றும் வாக்காளர் பட்டியல் உள்ளிட்ட விவரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

மாநில தேர்தல்ஆணையாளர் விரைவில் மற்ற மாவட்டங்களிலும் ஆலோசனை நடத்த உள்ளார்.

Next Story