ரத்ததானம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் மாற்றுத்திறனாளிக்கு நடிகர் ரஜினிகாந்த் பாராட்டு


ரத்ததானம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் மாற்றுத்திறனாளிக்கு நடிகர் ரஜினிகாந்த் பாராட்டு
x
தினத்தந்தி 5 Jun 2019 3:55 AM IST (Updated: 5 Jun 2019 3:55 AM IST)
t-max-icont-min-icon

நடிகர் ரஜினிகாந்த் ரத்ததானத்தில் உலக சாதனை புரிந்த பிரகாசை பாராட்டினார்.

மும்பை,

மும்பை, ஒர்லி பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ். மாற்றுத்திறனாளி. தமிழரான இவர், விளையாட்டு மற்றும் சமூக பணிகளில் ஆர்வம் கொண்டவர். இவர் கடந்த 26 ஆண்டுகளில் 100-க்கும் அதிகமான முறை ரத்ததானம் செய்து உலக சாதனை படைத்து உள்ளார்.

இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் பிரகாஷ் மும்பையில் நடிகர் ரஜினிகாந்தை சந்தித்தார். அப்போது ரஜினிகாந்த் ரத்ததானத்தில் உலக சாதனை புரிந்த பிரகாசை பாராட்டினார். இது குறித்து பிரகாஷ் கூறியதாவது:-

ரத்த தானம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவே ரத்த தானம் செய்து வருகிறேன். இதுவரை 1 லட்சத்து 5 ஆயிரம் கி.மீ. தூரம் பயணம் செய்து 18 மாநிலங்களில் ரத்த தானம் செய்து உள்ளேன். இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் ரத்த தானம் செய்ய திட்டமிட்டு உள்ளேன். மாற்றுத்திறனாளியான என்னால் ரத்த தானம் செய்ய முடியும் போது மற்றவர்களாலும் செய்ய முடியும் என்பதை உணர்த்தவே இதுபோல் செய்து வருகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story