குடிநீர், சுகாதாரத்திற்கு முன்னுரிமை வழங்க வேண்டும் அமைச்சர் சரோஜா அதிகாரிகளுக்கு உத்தரவு
குடிநீர், சுகாதார பிரச் சினைகளுக்கு முன் னுரிமை வழங்க வேண்டும் என்று அமைச்சர் சரோஜா அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
ராசிபுரம்,
ராசிபுரத்தில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் அனைத்து துறை அதிகாரிகளுடன் சமூகநலன் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை அமைச்சர் டாக்டர் வெ.சரோஜா ஆய்வுக்கூட்டம் நடத்தினார். இதில் ராசிபுரம் நகராட்சி ஆணையாளர், வட்டார வளர்ச்சி அதிகாரிகள், பேரூராட்சி அலுவலர்கள் உள்பட அனைத்துதுறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
நகராட்சி, ஒன்றியங்கள், பேரூராட்சி மற்றும் ஊராட்சி பகுதிகளில் குடிநீர் வசதி, சாலை வசதிகள், தூய்மை பணிகள் குறித்து அமைச்சர் ஆய்வு செய்தார். ராசிபுரம் நகராட்சி பகுதியில் பணியாற்றும் 130 தூய்மை பணியாளர்களை 6 பிரிவு பகுதிகளாக பிரித்து 27 வார்டுகளுக்கும் 6 துப்புரவு பணி மேற்பார்வையாளர்களையும், 2 துப்புரவு ஆய்வாளர்கள் மற்றும் ஒரு துப்புரவு அலுவலர் தலைமையில் பணிகள் தொய்வின்றி நடைபெற அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.
மேலும் தினசரி வீடு வீடாகச் சென்று குப்பைகளை சேகரித்து அதை தரம் பிரித்து உரம் தயாரித்தல், சாக்கடை கால்வாய்களை தினந்தோறும் சுத்தம் செய்தல், அனைத்து சாலைகளையும் தினசரி கூட்டுதல், குப்பைகளை உடனுக்குடன் அகற்றப்படுதல் மற்றும் நகராட்சி பகுதியில் உள்ள சமுதாய, பொதுக் கழிப்பிடங்களை பராமரித்து தூய்மையாக வைத்துக் கொள்ளுதல் போன்ற பணிகளை செய்ய உத்தரவிட்டார்.
நகராட்சி பகுதியில் தினசரி குடிநீர் வழங்க வேண்டும், பொதுக்கிணறுகளை சுத்தப்படுத்தி சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டும், விடுபடாமல் தெருவிளக்குகள் எரியச்செய்ய வேண்டும் என்று ஆலோசனை வழங்கினார். அதேபோல் ஒன்றியம், பேரூராட்சி, கிராமப் பகுதிகளிலும் குடிநீர், சுகாதார பணிகளுக்கு முன்னுரிமை வழங்கி பணிகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டார்.
பிறகு அமைச்சர் சரோஜா கூறியதாவது:- தமிழகத்தில் இக்கல்வியாண்டில் 2,381 நடுநிலைப்பள்ளிகளில் உள்ள அங்கன்வாடி மையங்களில் எல்.கே.ஜி. மற்றும் யு.கே.ஜி. தொடங்கப்படுகிறது. நாமக்கல் மாவட்டத்தில் 54 நடுநிலைப்பள்ளிகளிலும், குறிப்பாக ராசிபுரம் ஒன்றியத்தில் 7 நடுநிலைப்பள்ளிகளில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகள் தொடங்கப்படும். தற்போது இதுவரை எல்.கே.ஜி.யில் 36 மாணவர்களும், யு.கே.ஜி.யில் 46 மாணவர்களும் சேர்ந்துள்ளனர். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.
கூட்டத்தின்போது பொதுமக்கள் பல்வேறு கோரிக்கை மனுக்களை அமைச்சரிடம் அளித்தனர். ஆய்வுக்கூட்டத்தில் ராசிபுரம் தாசில்தார் சாகுல் அமீது, ராசிபுரம் நகர அ.தி.மு.க. செயலாளர் பாலசுப்பிரமணியன், ஒன்றிய செயலாளர்கள் காளியப்பன், இ.கே.பொன்னுசாமி, நகர பொருளாளர் கோபால், எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் சீனிவாசன், மாவட்ட மகளிர் அணி துணைத்தலைவர் ராதாசந்திரசேகர், ராசிபுரம் ஒன்றிய மகளிர் அணி செயலாளர் பாலாமணி, முன்னாள் சேர்மன் சரோஜி, பேரூராட்சி செயலாளர்கள் பாலு (பட்டணம்), செழியன் (அத்தனூர்) உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Tags :
Next Story