வானவில் : தேனீக்களை கவரும் செயற்கை பூக்கள்


வானவில் : தேனீக்களை கவரும் செயற்கை பூக்கள்
x
தினத்தந்தி 5 Jun 2019 7:00 PM IST (Updated: 5 Jun 2019 7:00 PM IST)
t-max-icont-min-icon

நம் நாட்டில் , தேனீ வளர்ப்பை தொழிலாக பலரும் செய்து வருகின்றனர். ஆஸ்திரேலியாவை சேர்ந்த மைக்கேல் கேண்டி என்பவர் அங்கே குறைந்து வரும் தேனீக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க ரோபோ பூக்களை உருவாக்கியுள்ளார்.

வண்ணத்தை நோக்கியே பூச்சி இனங்கள் ஈர்க்கப்பட்டு பூக்களில் அமர்கின்றன. இதை மனதில் வைத்து கொண்டு, வண்ணமயமாக இந்த ரோபோ பூக்களை வடிவமைத்துள்ளார். இந்த பூக்கள் முப்பரிமாண பிரிண்ட் செய்யப்பட்டவை. எளிதில் நிறம் மங்காத வகையில் இவை தயாரிக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு பூக்களுக்குள்ளும் ஒரு மகரந்தமும் செயற்கை தேனும் இருக்கிறது. இவ்வகையான ரோபோ பூக்களை நிஜ பூக்களின் நடுவே வைத்து விட்டால் தேனீக்கள் கூட்டம் கூட்டமாக இந்த மலர்களை தேடி வருகின்றன. இவ்வாறு தேனீக்களை மகரந்த சேர்க்கையில் ஈடுபட உதவுகிறது.

எல்லா பூக்களிலும் இருக்கும் தேனை சேகரித்து நடுப்பகுதிக்கு கொண்டு வருகின்றன ரோபோ பூக்கள். இதனால் எல்லா தேனீக்களுக்கும் சமமாக தேன் கிடைக்கிறது. இந்த ரோபோ பூக்கள் தேனீக்களை அழிவிலிருந்து காப்பாற்றுகின்றன.

Next Story