வானவில் : ஆன்லைன் வாசிப்பிற்கு துணை நிற்கும் விளக்கு
ஆன்லைனில் புத்தகம் வாசிப்பது பலரின் பொழுபோக்காக இருக்கிறது. லேப்டாப் போன்ற கருவிகளை குறைவான வெளிச்சத்தில் அதிக நேரம் பார்ப்பதால் கண்களுக்கு பாதிப்பு ஏற்படும்.
பென் க்யூ ஸ்க்ரீன் பார் எனப்படும் இந்த சிறிய விளக்கை லேப்டாப்பின் மீது பொருத்திக் கொள்ளலாம். இதை பொருத்துவதற்கு ஸ்க்ரூ அல்லது டேப் ஏதும் தேவையில்லை. அடிப்புறத்தில் இருக்கும் கிளிப் மூலம் இதனை எளிதாக மாட்டிக் கொள்ளலாம். சுற்றுப்புற வெளிச்சத்திற்கு ஏற்ப இந்த பென் க்யூ தனது வெளிச்சத்தை அட்ஜஸ்ட் செய்து கொள்கிறது.
இதனால் அதிக வெளிச்சத்தால் கண்கூச்சம் ஏற்படாமல் பார்த்துக் கொள்கிறது. மேலும் இதன் சமசீரற்ற ஆப்டிகல் வடிவம் மேசை வரை வெளிச்சத்தை பாய்ச்சும் என்றாலும், ஸ்க்ரீன் மீது அதிக ஒளியை உமிழாது. எந்த யு.எஸ்.பி. அவுட்லெட் மூலமாகவும் இந்த பென் க்யூ பாரை சார்ஜ் ஏற்றிக் கொள்ளலாம். திரையில் தோன்றும் வண்ணங்களுக்கு ஏற்ப ஒளியின் அளவை மாற்றி அமைத்துக் கொள்கிறது. நமது மனநிலைக்கு ஏற்ப மிதமான வெளிச்சத்தை உருவாக்கியும் ஆச்சரியப்படுத்துகிறது. ஆன் செய்த பிறகு இது தானியங்கியாகவே செயல்படும். தேவைப்பட்டால் வெளிச்சத்தின் அளவை நமக்கு ஏற்றார் போல வைத்துக் கொள்ளலாம்.
Related Tags :
Next Story