ஹைட்ரோ கார்பன் எதிர்ப்பு குறித்து கலந்தாய்வு கூட்டம் நடத்த வந்த 9 பேர் கைது


ஹைட்ரோ கார்பன் எதிர்ப்பு குறித்து கலந்தாய்வு கூட்டம் நடத்த வந்த 9 பேர் கைது
x
தினத்தந்தி 6 Jun 2019 3:45 AM IST (Updated: 6 Jun 2019 12:32 AM IST)
t-max-icont-min-icon

மன்னார்குடியில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்ப்பது குறித்த கலந்தாய்வு கூட்டம் நடத்த வந்த 9 பேரை போலீசார் கைது செய்தனர்.

மன்னார்குடி,

காவிரி டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த திட்டத்தை செயல்படுத்தினால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து விளைநிலங்கள் முற்றிலும் பாதிக்கப்படும் என விவசாயிகள் குற்றம் சாட்டி உள்ளனர்.

தற்போது டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் எதிர்ப்பு போராட்டம் வலுப்பெற தொடங்கி உள்ளது. இதன் ஒரு பகுதியாக திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் டெல்டா புலிகள் என்ற அமைப்பு முகநூல், வாட்ஸ்-அப் போன்ற சமூக வலைதளங்கள் வாயிலாக ஹைட்ரோ கார்பன் திட்டம் குறித்து மன்னார்குடியில் கலந்தாய்வு கூட்டம் நடத்த உள்ளதாக விளம்பரங்கள் வெளியிட்டதாக கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து இளைஞர்கள் நேற்று மன்னார்குடி ராஜகோபாலசாமி கோவில் வளாகத்தில் கூடினர். இது குறித்து தகவல் அறிந்த மன்னார்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் அனுமதி பெறாமல் கலந்தாய்வு கூட்டம் நடத்த கூடாது எனக்கூறி அங்கு வந்த 9 பேரை கைது செய்து அழைத்து சென்றனர். இதனால் கோவில் வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Next Story