ரம்ஜான் பண்டிகையையொட்டி தஞ்சையில் முஸ்லிம்கள் சிறப்பு தொழுகை
ரம்ஜான் பண்டிகையையொட்டி தஞ்சையில் முஸ்லிம்கள் சிறப்பு தொழுகை நடத்தினர்.
தஞ்சாவூர்,
ரம்ஜான் நோன்பு என்பது முஸ்லிம்களின் 5 கடமைகளில் ஒன்று. ஆண்டுதோறும் முஸ்லிம்கள் கடைபிடித்து வரும் ரம்ஜான் நோன்பு கடந்த மே மாதம் 7-ந்தேதி தொடங்கியது. நோன்பு காலத்தில் 5 வேளை முஸ்லிம்கள் தொழுகை செய்தனர். இந்த ரம்ஜான் நோன்பு முடிந்ததன் நிறைவாக ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும். அதன்படி இந்த ஆண்டு நோன்பு முடிந்து ரம்ஜான் பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது. முஸ்லிம்களின் புனித பண்டிகையான ரம்ஜான் பண்டிகையையொட்டி பள்ளிவாசல்களில் நேற்று காலை சிறப்பு தொழுகை நடந்தது. முஸ்லிம்கள் புத்தாடை அணிந்து உறவினர்கள், நண்பர்களுக்கு இனிப்புகள் வழங்கி ரம்ஜான் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர்.
சிறப்பு தொழுகை
தஞ்சை புதுஆற்றுப்பாலம் அருகே உள்ள ஜூம்மா பள்ளிவாசலில் நேற்று காலை சிறப்பு தொழுகை நடந்தது. இதில் ஏராளமான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர். இதே போல் தஞ்சை வடக்கு வாசல் பள்ளிவாசல், மருத்துவகல்லூரி சாலை ரகுமான்நகர் பள்ளிவாசல், பாம்பாட்டி தெரு பள்ளிவாசல், விசிறிக்காரத்தெரு பள்ளிவாசல், கீழஅலங்கம், மேலஅலங்கம், அண்ணாநகர், செல்வம் நகர் ஆகிய இடங்களில் உள்ள பள்ளிவாசல்களிலும் சிறப்பு தொழுகை நடந்தது. தஞ்சை ஆபிரகாம்பண்டிதர் சாலையில் உள்ள பள்ளிவாசல், கும்பகோணம் பைபாஸ் சாலையில் உள்ள பள்ளிவாசல், சிராஜுதீன் நகர் பள்ளிவாசல், ஆட்டுமந்தை தெரு பள்ளிவாசல், சேப்பனாவாரி மசூதி, காந்திஜிசாலையில் உள்ள மசூதி என தஞ்சை நகரில் உள்ள பள்ளிவாசல்கள், மசூதிகளில் சிறப்பு தொழுகை நடந்தது.
கைகுலுக்கி வாழ்த்து
தஞ்சை கீழவாசல் அண்ணா திருமண மண்டப திறந்தவெளி மைதானத்தில் தொழுகை நடைபெற்றது. இதில் ஏராளமான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர். தொழுகை முடிந்து வெளியே வந்த முஸ்லிம்கள் ஒருவருக்கொருவர் கட்டித்தழுவியும், கைகுலுக்கியும் ரம்ஜான் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர்.

Related Tags :
Next Story