சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம்; போக்சோ சட்டத்தில் தொழிலாளி கைது


சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம்; போக்சோ சட்டத்தில் தொழிலாளி கைது
x
தினத்தந்தி 6 Jun 2019 4:00 AM IST (Updated: 6 Jun 2019 1:04 AM IST)
t-max-icont-min-icon

மொடக்குறிச்சியை சேர்ந்த சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

ஈரோடு,

மொடக்குறிச்சி பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி சம்பவத்தன்று வீட்டை விட்டு வெளியே சென்றாள். பின்னர் அவள் வீடு திரும்பவில்லை. அதனால் அவளது பெற்றோர் அவளை பல இடங்களில் தேடிப்பார்த்தனர்.

ஆனால் அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் சிறுமியின் பெற்றோர் இதுபற்றி ஈரோடு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில், சிறுமியை அதே பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளி கிருஷ்ணன் (வயது 27). என்பவர் கடத்திச்சென்றது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து போலீசார் கிருஷ்ணனையும், சிறுமியையும் தேடி வந்தனர்.

இந்த நிலையில் 2 பேரும் சிவகிரி பகுதியில் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் விரைந்து சென்று கிருஷ்ணனை பிடித்து ஈரோடு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்தனர்.

பின்னர் போலீசார் கிருஷ்ணனிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி சிவகிரி பகுதிக்கு கடத்தி சென்றதும், பின்னர் அங்குள்ள ஒரு வீட்டில் வைத்து சிறுமியை கிருஷ்ணன் பாலியல் பலாத்காரம் செய்ததும் தெரியவந்தது.

அதைத்தொடர்ந்து போலீசார், கடத்தல் மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கிருஷ்ணனை கைது செய்தனர்.

Next Story