ரம்ஜான் பண்டிகை கொண்டாட்டம் முஸ்லிம்கள் சிறப்பு தொழுகை
ரம்ஜான் பண்டிகையையொட்டி முஸ்லிம்கள் பள்ளி வாசல்களில் சிறப்பு தொழுகையில் நடத்தினர். இதில் முஸ்லிம்கள் புத்தாடை அணிந்து ஒருவருக் கொருவர் வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டனர்.
அன்னவாசல்,
ரமலான் மாதத்தில் நோன்பிருப்பது முஸ்லிம்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றாகும். இதற்காக முஸ்லிம்கள் கடந்த ஒரு மாதமாக நோன்பிருந்து வந்தனர். இந்நிலையில் தமிழகத்தில் நேற்று முன்தினம் பிறை தெரிந்ததால் ரம்ஜான் பண்டிகை நேற்று கொண்டாடப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து அன்னவாசல், இலுப்பூர், முக்கண்ணாமலைப்பட்டி, மாங்குடி, பெருமநாடு, புல்வயல், வயலோகம், பரம்பூர், குடுமியான்மலை, காலாடிப்பட்டி, தென்னலூர் போன்ற பகுதிகளில் உள்ள பள்ளிவாசல்களில் ரம்ஜான் பண்டிகையையொட்டி சிறப்பு சொற்பொழிவு (பயான்) நடைபெற்றது. அதனைதொடர்ந்து வாஜிபான இரண்டு ரகாத் ஈதுல் பிதர் எனும் சிறப்பு தொழுகை நடந்தது. பின்னர் உலக அமைதிக்காகவும், இயற்கை வளம் வேண்டியும், மறுமையில் சுவனம் புகவும் கூட்டு பிரார்த்தனை செய்தனர். அதனை தொடர்ந்து பள்ளிவாசல் களில் உள்ள அடக்கஸ்தளத்திற்கு சென்று முன்னோர் களுக்காக சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
சிறப்பு தொழுகை
இதே போன்று அன்னவாசல் அருகே உள்ள முக்கண்ணாமலைப்பட்டியில் சுமார் 1,000-த்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு ஜாமியா பள்ளிவாசலில் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். இதில் பள்ளிவாசல் முத்தவள்ளி முகமது அப்துல்லா உள்ளிட்ட திரளான முஸ்லிம்கள் கலந்துகொண்டு தொழுகை முடிந்து ஒருவரை ஒருவர் கட்டித்தழுவி வாழ்த்து தெரிவித்து கொண்டனர்.
இதுபோன்று அன்னவாசல் மற்றும் இலுப்பூரில் பள்ளிவாசல்களில் இருந்து ஊர்வலமாக ஈத்கா மைதானத்திற்கு தக்பீர் முழக்கத்துடன் ஜமாத்தினர் சென்று, திறந்த வெளி மைதானத்தில் சிறப்பு தொழுகை நடத்தினர்.
அதேபோல் அன்னவாசல் பள்ளிவாசலில் இருந்து திரளான முஸ்லிம்கள் ஊர்வலமாக சென்று ஈத்கா மைதானத்தில் தொழுகை நடத்தினர். பின்பு தொழுகை முடிந்த பிறகு முஸ்லிம்கள் ஒருவரையொருவர் கட்டித்தழுவி வாழ்த்துகளை பரிமாறி கொண்டனர். பின்னர் நண்பர்கள், உறவினர்களுக்கு இனிப்புகள் வழங்கியும் பிரியாணி வழங்கியும் சிறப்பித்தனர்.
கோட்டைப்பட்டினம்
கோட்டைப்பட்டினம் பகுதிகளில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு தொழுகை திடலில் நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் கலந்துகொண்டு தொழுகை நடத்தினர். இதேபோல் கட்டுமாவடி, கிருஷ்ணாஜிப்பட்டினம், அம்மாப்பட்டினம், வடக்கம்மாப்பட்டினம், கோட்டைப்பட்டினம் போன்ற பகுதிகளில் ரம்ஜான் சிறப்பு தொழுகை திடலில் நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் கலந்து கொண்டு தொழுகை நடத்தினர். பிறகு ஒருவருக்கொருவர் கட்டியணைத்து ரம்ஜான் வாழ்த்துக்களை பரிமாறி கொண்டனர். இந்த ரம்ஜான் சிறப்பு தொழுகையில் திரை அமைக்கப்பட்டு அதிகமான பெண்களும் கலந்து கொண்டனர்.
பொன்னமராவதி, கீரனூர்
பொன்னமராவதி அருகே உள்ள பொன் இந்திராநகர், கேசராபட்டி பள்ளிவாசல்களில் ரம்ஜான் சிறப்பு தொழுகை நடைபெற்றது. கீரனூர் குத்பா பள்ளி வாசலில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. பின்னர் முஸ்லிம்கள் அங்கிருந்து ஊர்வலமாக புறப்பட்டு கடைவீதி வழியாக ஜூம்மா பள்ளி வாசலுக்கு சென்று சிறப்பு தொழுகை நடத்தினர். பின்னர் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

Related Tags :
Next Story