நெல்லை மாவட்டத்தில் கடையம், கடையநல்லூர், களக்காடு யூனியன் வார்டுகளில் பெண்களுக்கான இடஒதுக்கீடு விவரம்


நெல்லை மாவட்டத்தில் கடையம், கடையநல்லூர், களக்காடு யூனியன் வார்டுகளில் பெண்களுக்கான இடஒதுக்கீடு விவரம்
x
தினத்தந்தி 6 Jun 2019 3:45 AM IST (Updated: 6 Jun 2019 2:34 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 50 சதவீதம் இடஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது.

நெல்லை,

கடையம், கடையநல்லூர், களக்காடு யூனியன்களில் வார்டு வாரியாக இடஒதுக்கீடு விவரம் வருமாறு:-

கடையம் யூனியனில் மொத்தம் 17 வார்டுகள் உள்ளன. அதில் 2 வார்டுகள் தாழ்த்தப்பட்ட பெண்களுக்கும், ஒரு வார்டு தாழ்த்தப்பட்ட பொது பிரிவுக்கும், 7 வார்டுகள் பெண்கள் பொதுப்பிரிவுக்கும், 7 வார்டுகள் பொதுப்பிரிவுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

பாப்பான்குளம், பொட்டல்புதூர் பகுதி 9-வது வார்டு, மேலஆம்பூர், கீழ ஆம்பூர் பகுதி 15-வது வார்டு ஆகியவை தாழ்த்தப்பட்ட பெண்களுக்கும், வீராசமுத்திரம், மந்தியூர், கோவிந்தபேரி பகுதி 13-வது வார்டு தாழ்த்தப்பட்ட பொதுப்பிரிவுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

வெங்காடம்பட்டி, ஐந்தாங்கட்டளை பகுதி 3-வது வார்டு, கீழக்கடையம் பகுதி 4-வது வார்டு, கீழக்கடையம், முதலியார்பட்டி பகுதி 5-வது வார்டு, மடத்தூர், அனைந்தபெருமாள் நாடானூர் பகுதி 8-வது வார்டு, பொட்டல்புதூர் பகுதி 10-வது வார்டு, கீழ ஆம்பூர் பஞ்சாயத்து பகுதி 16-வது வார்டு அடைச்சாணி, துப்பாக்குடி பகுதி 17-வது வார்டு ஆகிய 7 வார்டுகள் பெண்கள் பொதுப்பிரிவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

கடையம் பெரும்பத்து பஞ்சாயத்து பகுதி 1-வது வார்டு, கடையம் பெரும்பத்தில் ஒரு வார்டு, வெங்காடம்பட்டி பகுதியை உள்ளடக்கிய 2-வது வார்டு, சேர்வைகாரன்பட்டி பகுதி 6-வது வார்டு, மடத்தூர், ஐந்தாங்கட்டளை பஞ்சாயத்துகளில் ஒருசில வார்டுகள் மற்றும் தெற்குமடத்தூர் பகுதியை உள்ளடக்கிய 7-வது வார்டு, கடையம் பகுதி 11-வது வார்டு, திருமலையப்பபுரம், ரவணசமுத்திரம் பகுதி 12-வது வார்டு, கோவிந்தபேரி, தர்மபுரமடம், சிவசைலம் பகுதி 14-வது வார்டு ஆகிய 7 வார்டுகள் பொதுப்பிரிவினருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

கடையநல்லூர் யூனியனில் மொத்தம் 12 வார்டுகள் உள்ளன. இதில் 7 வார்டுகள் பெண்களுக்கும், ஒரு வார்டு தாழ்த்தப்பட்ட பொதுப்பிரிவுக்கும், 4 வார்டுகள் பொதுப்பிரிவுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

போகநல்லூர் பகுதி 4-வது வார்டு, புதுக்குடி, வேலாயுதபுரம் பகுதி 10-வது வார்டு தாழ்த்தப்பட்ட பெண்களுக்கும், இடைகால், ஊர்மேலழகியான் கிராமபகுதி 9-வது வார்டு தாழ்த்தப்பட்ட பொதுப்பிரிவுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

திருக்குடபுரம், சொக்கம்பட்டி பகுதி 1-வது வார்டு, சொக்கம்பட்டி பஞ்சாயத்தில் பெரும் பகுதியை கொண்ட 2-வது வார்டு, கம்பநேரி பகுதி 5-வது வார்டு, நயினாகரம் பகுதி 8-வது வார்டு, ஆனைகுளம், குலயநேரி பகுதி 12-வது வார்டு ஆகிய 5 வார்டுகள் பெண்கள் பொதுப்பிரிவுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இதுதவிர புன்னையபுரம், நயினாகரம் பகுதி 6-வது வார்டு, நெடுவயல், கொடிக்குறிச்சி பகுதி 7-வது வார்டு, பொய்கை, குலயநேரி பகுதி 11-வது வார்டு பொதுப்பிரிவினருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

களக்காடு யூனியனில் மொத்தம் 9 வார்டுகள் உள்ளன. இதில் சீவலப்பேரி, கோவிலம்மாள்புரம் பகுதி 5-வது வார்டு தாழ்த்தப்பட்ட பெண்களுக்கும், சிங்கிகுளம், கீழகாடுவெட்டி பகுதி 2-வது வார்டு, மலையடிபுதூர், தளவாய்புரம் பகுதி 7-வது வார்டு, செங்காலகுறிச்சி, கோவிலம்மாள்புரம் பகுதி 8-வது வார்டு, புலியூர்குறிச்சி பகுதி 9-வது வார்டு ஆகிய 4 வார்டுகள் பெண்கள் பொதுப்பிரிவுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

மேலும் இடையன்குளம், பத்மநேரி, தேவநல்லூர் பகுதி 1-வது வார்டு, தேவநல்லூர், கீழகருவேலங்குளம் பகுதி 3-வது வார்டு, கள்ளிகுளம், படலையார்குளம், கீழகாடுவெட்டி பகுதி 4-வது வார்டு, சூரங்குடி, கடம்போடு வாழ்வு, வடுகச்சிமதில் பகுதி 6-வது வார்டு ஆகிய 4 வார்டுகள் பொதுப்பிரிவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

Next Story