குட்கா விவகாரத்தில் அனுமதியின்றி பொதுக்கூட்டம்: 2 எம்.எல்.ஏ.க்கள் உள்பட 12 பேர் மீது வழக்கு


குட்கா விவகாரத்தில் அனுமதியின்றி பொதுக்கூட்டம்: 2 எம்.எல்.ஏ.க்கள் உள்பட 12 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 5 Jun 2019 10:15 PM GMT (Updated: 5 Jun 2019 9:22 PM GMT)

குட்கா விவகாரத்தில் அனுமதியின்றி பொதுக்கூட்டம் நடத்திய 2 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் உள்பட 12 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

குழித்துறை,

மார்த்தாண்டம் குடோனில் ரூ.1 கோடி மதிப்புள்ள குட்கா பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக குடோன் உரிமையாளர் செல்வராஜ் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். செல்வராஜ் குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் துணை தலைவராக உள்ளார்.

குட்கா விவகாரத்தில் செல்வராஜ் கைது செய்யப்பட்டதை கண்டித்து நேற்றுமுன்தினம் மாலையில் காங்கிரஸ் சார்பில் கண்டன பொதுக்கூட்டம் மார்த்தாண்டத்தில் நடந்தது. இந்த பொதுக்கூட்டத்திற்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை.

எனினும் பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ராஜேஷ்குமார், பிரின்ஸ், திருச்சி வேலுச்சாமி மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு பேசினர். இந்தநிலையில் அனுமதி இன்றி பொதுக்கூட்டம் நடத்துதல் மற்றும் போலீசாரை தரக்குறைவாக பேசியதாக காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் உள்பட 12 பேர் மீது மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் மீது போலீசார் வழக்குபதிவு செய்த சம்பவம் குமரியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story