விரைவில் உள்ளாட்சி தேர்தல் பேரூராட்சியில் வார்டுகள் ஒதுக்கீடு விவரம்
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 7 பேரூராட்சிகளில் இடஒதுக்கீடு வாரியாக வார்டுகள் மறுவரையறை செய்து ஒதுக்கீடு செய்யப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
ராமநாதபுரம்,
தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளதையொட்டி இடஒதுக்கீடு விகிதாச்சார அடிப்படையில் வார்டுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 7 பேரூராட்சிகளில் இடஒதுக்கீடு அடிப்படையில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள வார்டுகள் விபரம் வருமாறு:– ராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் பேரூராட்சியில் 2,4,5,8,1011,12,15 ஆகிய வார்டுகள் (பொது) பெண்கள் வார்டுகளாகவும், மற்றவை பொது வார்டுகளாகவும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இந்த பேரூராட்சியில் தனி வார்டு எதுவும் ஒதுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கமுதி பேரூராட்சியில் 13, 14 வார்டுகள் (தனி) பெண்களுக்கும், 1–வது வார்டு (தனி) பொது வார்டாகவுடம், 2,3,4,8,12,15 ஆகிய வார்டுகள் (பொது) பெண்கள் வார்டாகவும், மற்றவை பொது வார்டாகவும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதேபோல மண்டபம் பேரூராட்சியில் 1–வது வார்டு (தனி) பெண்களுக்கும், 3,4,8,12,13,14,15,16 ஆகிய வார்டுகள் (பொது) பெண்களுக்கும், மற்றவை பொது வார்டாகவும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. முதுகுளத்தூர் பேரூராட்சியில் 2,15 வார்டுகள் (தனி) பெண்களுக்கும், 9,10 (தனி) பொது வார்டாகவும், 3,5,11,12,13,14 ஆகிய வார்டுகள் (பொது) பெண்கள் வார்டாகவும், மற்றவை பொது வார்டாகவும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
ஆர்.எஸ்.மங்கலம் பேரூராட்சியில் 14–வது வார்டு(தனி) பெண்களுக்கும், 7–வது வார்டு (தனி) பொது வார்டாகவும், 3,4,8,9,12,13,15 ஆகிய வார்டுகள் பெண்கள் பொது வார்டாகவும், மற்றவை பொது வார்டாகவும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. சாயல்குடி பேரூராட்சியில் 11–வது வார்டு (தனி) பெண்களுக்கும், 10–வது வார்டு (தனி) பொது வார்டாகவும், 2,3,4,6,9.12,13 ஆகிய வார்டுகள் பொது பெண்களுக்கும், மற்றவை பொது வார்டாகவும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. தொண்டி பேரூராட்சியில் 3,4 ஆகிய வார்டுகள் (தனி) பெண்களுக்கும், 15–வது வார்டு (தனி) பொது வார்டாகவும், 1,9,10,11,13,14 ஆகிய வார்டுகள் (பொது) பெண்கள் வார்டாகவும், மற்றவை பொது வார்டாகவும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.