குசால்நகரில் பரிதாபம் காவிரி ஆற்றில் மூழ்கி பி.யூ.சி. மாணவர்கள் 3 பேர் பலி
குசால்நகரில் காவிரி ஆற்றில் மூழ்கி பி.யூ.சி. மாணவர்கள் 3 பேர் பலியான சோக சம்பவம் நடந்துள்ளது.
பெங்களூரு,
குடகு மாவட்டம் மடிகேரி டவுன் பகுதியை சேர்ந்தவர் ஆகாஷ். இவரது நண்பர்கள் ககன், சாஷங். இவர்கள் 3 பேரும் மடிகேரியில் உள்ள ஒரு பி.யூ.சி. கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தனர். நேற்று ரம்ஜான் விடுமுறை என்பதால், நண்பர்கள் 3 பேரும் மேலும் சிலருடன் குடகு மாவட்டம் சோமவார்பேட்டை தாலுகா குசால்நகருக்கு மோட்டார் சைக்கிள்களில் சென்றனர். அவர்கள் குசால்நகரில் ஓடும் காவிரி ஆற்றில் நீச்சல் அடித்து குளித்துக்கொண்டிருந்தனர்.
அப்போது ஆகாஷ், ககன், சாஷங் ஆகியோர் திடீரென்று நீரில் மூழ்கி தத்தளித்தனர். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்களுடன் சென்றவர்கள், அவர்களை காப்பாற்ற முயன்றனர்.
3 பேரும் நீரில் மூழ்கி பலி
ஆனால் அதற்குள் 3 பேரும் காவரி ஆற்று நீரில் மூழ்கி பலியாகிவிட்டனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் குசால்நகர் டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 3 பேரின் உடல்களையும் தீயணைப்பு படையினர் உதவியுடன் மீட்டனர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக குசால்நகர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
இதுகுறித்து குசால்நகர் டவுன் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். சுற்றுலா சென்ற இடத்தில் 3 மாணவர்களும் காவிரி ஆற்றில் மூழ்கி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story