சங்கராபரணி ஆற்றில் மணல் கடத்த முயன்ற 3 மினி லாரிகள் பறிமுதல்


சங்கராபரணி ஆற்றில் மணல் கடத்த முயன்ற 3 மினி லாரிகள் பறிமுதல்
x
தினத்தந்தி 5 Jun 2019 10:32 PM GMT (Updated: 5 Jun 2019 10:32 PM GMT)

சங்கராபரணி ஆற்றில் மணல் கடத்த முயன்ற 3 மினி லாரிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

வில்லியனூர்,

புதுவை மாநிலம் சங்கராபரணி ஆறு, பெண்ணை ஆற்றில் மணல் எடுக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதையும் மீறி சிலர் மணல் கடத்தி வருகின்றனர். இதை தடுக்க போலீசார், வருவாய்த்துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் வில்லியனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனிவேலு உத்தரவின்பேரில் போலீசார் நேற்று முன்தினம் இரவு சேந்தநத்தம் சங்கராபரணி ஆற்று பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது ஆற்றில் 3 மினி லாரிகளில் சிலர் மணல் ஏற்றி, கடத்த முயன்றனர். அவர்கள் போலீசாரை பார்த்ததும் லாரியை அங்கேயே விட்டுவிட்டு தப்பி ஓடினர். அவர்களை போலீசார் பிடிக்க முயன்றனர். ஆனால் முடியவில்லை.

இதையடுத்து 3 மினி லாரிகளையும் போலீசார் பறிமுதல் செய்து வில்லியனூர் வருவாய்த்துறை அலுவலகத்தில் ஒப்படைத்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து மணல் கடத்த முயன்றவர்கள் யார்? என்று விசாரித்து வருகின்றனர்.


Next Story