மேல்நிலை குடிநீர் தொட்டியில் கசிவு தி.மு.க. எம்.எல்.ஏ. புகார்


மேல்நிலை குடிநீர் தொட்டியில் கசிவு தி.மு.க. எம்.எல்.ஏ. புகார்
x
தினத்தந்தி 6 Jun 2019 4:26 AM IST (Updated: 6 Jun 2019 4:26 AM IST)
t-max-icont-min-icon

குடிநீர் கசிந்து வெளியே செல்வதாக தாம்பரம் எம்.எல்.ஏ. எஸ்.ஆர்.ராஜா புகார் தெரிவித்து உள்ளார்.

தாம்பரம், 

தாம்பரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சிட்லபாக்கம் மாடம்பாக்கம் பேரூராட்சிகளில் ரூ.3 கோடியில் கூட்டு குடிநீர் திட்டம் முடிவடைந்து நேற்றுமுன்தினம் உள்ளாட்சி துறை அமைச்சர் வேலுமணி குடிநீர் வினியோகத்தை தொடங்கி வைத்தார்

இந்நிலையில் சிட்லபாக்கம் பாபு தெருவில் புதிதாக அமைக்கப்பட்ட அந்த மேல்நிலை குடிநீர் தொட்டி பழுதடைந்து, 3 இடத்தில் குடிநீர் கசிந்து வெளியே செல்வதாக தாம்பரம் எம்.எல்.ஏ. எஸ்.ஆர்.ராஜா புகார் தெரிவித்து உள்ளார்.

மேலும் இதுகுறித்து காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டரிடம் புகார் மனு அளிக்க உள்ளதாக அவர் தெரிவித்தார்.

Next Story