மாடல் அழகியை மானபங்கம் செய்த இந்திப்பட தயாரிப்பாளர், இசையமைப்பாளர் கைது
மலாடில் மாடல் அழகியை மானபங்கம் செய்த இந்திப்பட தயாரிப்பாளர், இசையமைப்பாளரை போலீசார் கைது செய்தனர்.
மும்பை,
மும்பை மலாடை சேர்ந்த இந்தி பட தயாரிப்பாளர் முந்தரா சிங். இவருக்கு சார்க்கோப்பை சேர்ந்த 27 வயது மாடல் அழகியின் அறிமுகம் கிடைத்தது. சம்பவத்தன்று மாடல் அழகி சினிமா வாய்ப்புக்காக முந்தரா சிங்கை அவரது வீட்டில் சென்று சந்தித்து பேசினார்.
அப்போது, இசையமைப்பாளர் கரண்வாகி என்பவரும் அங்கு இருந்ததாக கூறப்படுகிறது. பின்னர் இருவரும் மாடல் அழகிக்கு வீட்டில் விருந்து கொடுத்து உள்ளனர்.
மானபங்கம்
அப்போது, மாடல் அழகி வீட்டில் உள்ள சமையல் அறைக்கு சென்ற போது, அவரை பின் தொடர்ந்து சென்ற முந்தரா சிங் கட்டி அணைத்து முத்தம் கொடுக்க முயற்சி செய்திருக்கிறார். இதனால் மாடல் அழகி அதிர்ச்சிஅடைந்தார். பின்னர் திடீரென அவர் மயக்கம் அடைந்ததாக கூறப்படுகிறது.
இந்தநிலையில், காலை எழுந்த போது மாடல் அழகிக்கு உடலில் சில இடங்களில் வேதனை ஏற்பட்டது. இதனால் அவர் குளியலறையில் சென்று பார்த்தார். அப்போது, அவர் உடலில் பல இடங்களில் நகக்கீறல்கள் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
இதனால் தான் மானபங்கம் செய்யப்பட்டதை அறிந்து அதிர்ச்சி அடைந்த மாடல் அழகி, முந்தரா சிங் மற்றும் கரண்வாகி ஆகிய இருவர் மீதும் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர்.
Related Tags :
Next Story