எட்டயபுரம் தாலுகாவில் ஜமாபந்தி 11-ந்தேதி தொடங்குகிறது
எட்டயபுரம் தாலுகாவில் ஜமாபந்தி வருகிற 11-ந்தேதி தொடங்குகிறது.
எட்டயபுரம்,
இதுகுறித்து எட்டயபுரம் தாசில்தார் வதனாள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது:-
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் தாலுகா அலுவலகத்தில் கலால் உதவி ஆணையர் தலைமையில் வருகிற 11-ந்தேதி முதல் ஜமாபந்தி நடக்க உள்ளது. 11-ந்தேதி படர்ந்தபுளி குறுவட்டத்தை சேர்ந்த படர்ந்தபுளி, பேரிலோவன்பட்டி, நம்பிபுரம், டி.தங்கம்மாள்புரம், ராமனூத்து, தலைக்காட்டுபுரம், சிங்கிலிப்பட்டி ஆகிய கிராமங்களுக்கும், 12-ந்தேதி கழுகாசலபுரம், வேலிடுபட்டி, என்.புதுப்பட்டி மற்றும் முத்துலாபுரம் குறுவட்டத்தை சேர்ந்த அயன்கரிசல்குளம், வி.கோடங்கிப்பட்டி, வெம்பூர், கீழக்கரந்தை ஆகிய கிராமங்களுக்கும்,
13-ந்தேதி மேலக்கரந்தை, மாசார்பட்டி, ராஜாப்பட்டி, அருணாச்சலபுரம், தோள்மாலைப்பட்டி, கரும்பூர், வீரப்பட்டி ஆகிய கிராமங்களுக்கும், 14-ந்தேதி முத்துலாபுரம், கீழ்நாட்டு குறிச்சி, சக்கிலிப்பட்டி, தாப்பாத்தி, அயன்வடமலாபுரம், என்.வேடப்பட்டி, மஞ்சநாயக்கன்பட்டி ஆகிய கிராமங்களுக்கும் நடக்கிறது.
18-ந்தேதி போடுபட்டி, ஆத்திக்கிணர், தி.சண்முகபுரம், எத்திலப்பநாயக்கன்பட்டி, சோழப்புரம் புங்கவர்நத்தம், கன்னக்கட்டை ஆகிய கிராமங்களுக்கும், 19-ந்தேதி கடலையூர் குறுவட்டத்தை சேர்ந்த சிதம்பராபுரம், கட்டராமன்பட்டி, கடலையூர், உருளைகுடி, அய்யாக்கோட்டையூர், மீனாட்சிபுரம், நாவலக்கம்பட்டி ஆகிய கிராமங்களுக்கும், 20-ந்தேதி சிந்தலக்கரை, சின்னமலைக்குன்று மற்றும் எட்டயபுரம் குறுவட்டத்தை சேர்ந்த இளம்புவனம், குமாரகிரி, ரணசூரஎட்டுநாயக்கன்பட்டி, சுரைக்காய்ப்பட்டி, செமப்புதூர் ஆகிய கிராமங்களுக்கும், 21-ந்தேதி ஈராச்சி, எட்டயபுரம், மேலஈரால், வாலம்பட்டி, நக்கலக்கட்டை, கீழஈரால், டி.அருணாசலபுரம் ஆகிய கிராமங்களுக்கும் நடக்கிறது. இதில் அந்தந்த கிராம மக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை அளித்து பயன்பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story