திருமணமான 7 மாதத்தில் தூக்குப்போட்டு இளம் பெண் தற்கொலை உதவி கலெக்டர் விசாரணை


திருமணமான 7 மாதத்தில் தூக்குப்போட்டு இளம் பெண் தற்கொலை உதவி கலெக்டர் விசாரணை
x
தினத்தந்தி 7 Jun 2019 4:15 AM IST (Updated: 6 Jun 2019 11:05 PM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலையில் திருமணமான 7 மாதத்தில் இளம் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுதொடர்பாக உதவி கலெக்டர் ஸ்ரீதேவி மேல் விசாரணை நடத்தி வருகிறார்.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை தாலுகா மங்கலம் அருகே உள்ள விஸ்வநாதபுரம் கிராமத்தை சேர்ந்தவர் பாண்டியன். இவரது மனைவி கவிதா (வயது 19). இவர்களுக்கு திருமணமாகி 7 மாதங்கள் ஆகிறது.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக கவிதா உடல்நிலை சரியில்லாமல் அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்காக பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றும் எந்தவித பயனும் இல்லை என்று கூறப்படுகிறது. இதனால் மனவேதனையில் இருந்து கவிதா, சம்பவத்தன்று தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார்.

இதனையடுத்து அவர் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து மங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

தற்கொலை ெசய்துகொண்ட கவிதாவிற்கு திருமணமாகி 7 மாதங்களே ஆவதால் திருவண்ணாமலை உதவி கலெக்டர் ஸ்ரீதேவி மேல் விசாரணை நடத்தி வருகிறார்.

இந்த சம்பவம் அந்த கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story