தரங்கம்பாடியில் ரூ. 3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய நில அளவையர் கைது
தரங்கம்பாடியில், நிலத்தை அளந்து கொடுக்க ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய நில அளவையரை போலீசார் கைது செய்தனர்.
பொறையாறு,
நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள சோழம்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் நடராஜன்(வயது 27). இவர், தரங்கம்பாடி தாலுகா அலுவலகத்தில் உள்ள தில்லையாடியில் வருவாய் சரக நில அளவையராக பணியாற்றி வருகிறார்.
இவரிடம், புதுச்சேரியை சேர்ந்த நாகராஜ், பொறையாறு அருகே உள்ள எருக்கட்டாஞ்சேரி கிராமத்தில் தனக்கு சொந்தமான இடத்தை அளந்து கொடுக்குமாறு கூறினார். அதற்கு நடராஜன், ரூ.3 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.
லஞ்சம் கொடுக்க விரும்பாத நாகராஜ், இதுகுறித்து நாகை லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதனையடுத்து அவரை கையும், களவுமாக பிடிக்க லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் முடிவு செய்தனர்.
இதனையடுத்து ரசாயன பவுடர் தடவிய ரூபாய் நோட்டுகளை நாகராஜிடம் கொடுத்து அதனை நடராஜனிடம் கொடுக்குமாறு போலீசார் கூறினர்.
இதனைத்தொடர்ந்து போலீசார் கூறியபடி ரசாயன பவுடர் தடவிய ரூ.3 ஆயிரத்தை நாகராஜ் நேற்று மாலை நடராஜனிடம் லஞ்சமாக கொடுத்தார். அப்போது அங்கு மறைந்து இருந்த திருச்சி லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு மணிகண்டன், நாகை லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் அருள்பிரியா மற்றும் போலீசார் நடராஜனை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். கைதான நடராஜனிடம் இருந்து பல்வேறு முக்கிய ஆவணங்களையும் போலீசார் கைப்பற்றினர். நடராஜன் நில அளவையர் பணியில் சேர்ந்து 1 ஆண்டுதான் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
லஞ்சம் வாங்கிய வழக்கில் நில அளவையர் கைதான சம்பவம் தரங்கம்பாடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Tags :
Next Story