‘நீட்’ தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு என்பதில் அ.தி.மு.க. அரசு உறுதியாக உள்ளது அமைச்சர் பேட்டி
‘நீட்’ தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்பதில் அ.தி.மு.க. அரசு உறுதியாக உள்ளது என அமைச்சர் காமராஜ் கூறினார்.
வடுவூர்,
திருவாரூர் மாவட்டம் வடுவூரில் 316 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது வடுவூர் ஏரி. பறவைகள் சரணாலயமாக உள்ள இந்த ஏரியில் இருந்து 30 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த ஆண்டு விவசாயிகளுக்கு, வண்டல் மண் எடுத்துக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டது. மேலும் இந்த ஆண்டு ரூ.3 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் பொதுப்பணித்துறை சார்பில் தூர்வாரும் பணிகள் தற்போது நடந்து வருகிறது.
தொடர்ந்து விவசாயிகள் வண்டல் மண் எடுத்துக்கொள்ள அனுமதி கேட்டு வந்த நிலையில் தமிழக அரசு 2-வது ஆண்டாக விவசாயிகள் வண்டல் மண் எடுக்க அனுமதி அளித்தது. இதை தொடர்ந்து நேற்று நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர் ஆர்.காமராஜ் கலந்து கொண்டு வடுவூர் ஏரியில் வண்டல் மண் எடுக்கும் பணியினை தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர், நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
‘நீட்’ தேர்வு
திருவாரூர் மாவட்டம் முழுவதும் உள்ள நீர்நிலைகளில் விவசாயிகள் வண்டல் மண் எடுக்க கோரிக்கை விடுத்தால் உடனடியாக அனுமதி அளிக்குமாறு மாவட்ட நிர்வாகத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட எந்த ஒரு திட்டமும் மக்களால் எதிர்க்கப்படுமானால் அவற்றிற்கு மாநில அரசு அனுமதி அளிக்காது. மக்கள் விரும்பாத எந்த ஒரு திட்டத்தையும் மத்திய அரசோ அல்லது தமிழக அரசோ தமிழகத்தில் செயல்படுத்தாது. ‘நீட்’ தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்பதில் அ.தி.மு.க. அரசு எப்போதும் உறுதியாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினர்.
நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் ஆனந்த், மாவட்ட வருவாய் அலுவலர் பொன்னம்மாள், வெண்ணாறு வடிநில தஞ்சை கோட்ட செயற்பொறியாளர் அசோகன், உதவி கலெக்டர் புண்ணியகோட்டி, உதவி செயற்பொறியாளர்கள் இளங்கோ, ரவீந்திரன், அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் அரிகிருஷ்ணன், த.மா.கா. மாநில பொதுச் செயலாளர் கார்த்திகேயன் மற்றும் அரசு அலுவலர்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story