தஞ்சை மாநகர பகுதிகளில் வீதி, வீதியாக சென்று வைத்திலிங்கம் எம்.பி. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்
தஞ்சை மாநகர பகுதிகளில் வீதி, வீதியாக சென்று வாக்காளர் களுக்கு வைத்திலிங்கம் எம்.பி. மற்றும் அ.தி.மு.க. வேட்பாளராக போட்டியிட்ட காந்தி ஆகியோர் நன்றி தெரிவித்தனர்.
தஞ்சாவூர்,
தஞ்சை சட்டசபை இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளராக ஆர்.காந்தி போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார். இந்த நிலையில் தேர்தலில் வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக கரந்தை, பள்ளியக்ரஹாரம் உள்ளிட்ட தஞ்சை மாநகர பகுதிகளில் நேற்று மாலை வீதி, வீதியாக சென்று நன்றி தெரிவித்தார்.
திறந்த ஜீப்பில் அவருடன் அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் எம்.பி. சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து பேசினார்.
அவர் பேசுகையில், “தஞ்சையின் வளர்ச்சிக்கு மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர்கள் ஜெயலலிதா, எம்.ஜி.ஆர். ஆகியோர் தான் காரணம். இரட்டை இலை சின்னத்துக்கு வாக்களித்தவர்களுக்கும், வாக்களிக்காதவர்களுக்கும் நாங்கள் கடமையை ஆற்றுவோம்.
மக்கள் தீர்ப்பே, மகேசன் தீர்ப்பு என்று கூறிய முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் ஆசியோடு நாங்கள் என்றைக்கும் மக்களுக்கு கடமையை ஆற்றுவோம். தஞ்சை வளர்ச்சிக்கு தொடர்ந்து பாடுபடுவோம்” என்றார்.
அவருடன் அ.தி.மு.க. பகுதி செயலாளர்கள் அறிவுடைநம்பி, புண்ணியமூர்த்தி, சரவணன், ரமேஷ், முன்னாள் மேயர் சாவித்திரி கோபால், முன்னாள் துணை மேயர் மணிகண்டன், மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் துரை.திருஞானம், முன்னாள் நகர செயலாளர்கள் பண்டரிநாதன், பஞ்சாபகேசன், தே.மு.தி.க. மாவட்ட செயலாளர் முகமது அலி, பொருளாளர் செங்குட்டுவன் மற்றும் கூட்டணி கட்சியினர் உடன் சென்றனர்.

Related Tags :
Next Story