24 மணி நேரமும் கடை திறக்க அனுமதி: தமிழக அரசு ஆணை குறித்து வணிகர்கள் கருத்து
24 மணி நேரமும் கடை திறக்க அனுமதி அளித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள ஆணை குறித்து வணிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
பெரம்பலூர்,
தமிழகத்தில் 24 மணி நேரமும் கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களை திறக்க அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் த.வெள்ளையன் கூறியதாவது:-
வணிகர்களுக்கு முன்பு ‘லைசென்சு’ வழங்கியபோது இரவு 1.30 மணி வரை கடைகள் திறந்திருக்கலாம் என்று அனுமதிக்கப்பட்டது. ஆனால் இரவு கடை திறந்திருந்தால் வியாபாரிகளை அவதூறாக திட்டுதல், வழக்கு போடுதல் என்று போலீசார் அத்துமீறல் இருந்தது. ஆனால் தற்போது திடீரென்று 24 மணி நேரமும் கடைகளை திறக்கலாம் என்று தமிழக அரசு உத்தரவிட்டு இருப்பது உள்நோக்கம் கொண்டதாக தெரிகிறது.
‘ஆன்-லைன்’ வணிகத்தில் ஈடுபடும் வெளிநாட்டு நிறுவனங்கள் தமிழகம் முழுவதும் கடைகளை திறக்க திட்டமிட்டுள்ளன. எனவே வெளிநாட்டு வணிகத்தை ஊக்குவிக்கவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை கருதுகிறது. ஏற்கனவே உள்நாட்டு வணிகம் அழிந்து வருகிறது. எனவே இந்த உத்தரவால் சாமானிய வணிகர்கள் பெரிதும் பயன்பெற போவது இல்லை.
பணக்கார நாடுகளில் இருந்து மத்திய அரசுக்கு உத்தரவுகள் வருகிறது. மத்திய அரசு அதனை தமிழக அரசு மீது திணிக்கிறது. எனவே மத்திய-மாநில அரசுகள் சுய சிந்தனையுடன் இந்த முடிவை எடுக்கவில்லை என்று நான் குற்றம் சாட்டுகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா கூறியதாவது:-
24 மணி நேரமும் கடைகள் இயங்க அனுமதிக்க வேண்டும் என்று எங்கள் அமைப்பு கடந்த 6 ஆண்டுகளாக மாநில மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றி வந்தது. தற்போது தமிழக அரசு இதற்கு அனுமதி வழங்கி இருப்பதை வரவேற்கிறோம். இந்த அரசாணையால் வெகுகாலமாக பாதிக்கப்பட்டு வந்த இரவு நேர டீக்கடைகள், உணவகங்கள் மற்றும் நெடுஞ்சாலை கடைகள் நடத்தும் வணிகர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
24 மணி நேரமும் இயங்கும் கடைகளில் குறைந்தபட்சம் 10 பேர் பணியாற்ற வேண்டும் என்று அந்த அரசாணையில் கூறப்பட்டுள்ளது. சாதாரண டீக்கடையில் 10 பேருக்கு குறைவாகவே பணியாற்றுவர். இதனால் சாதாரண டீக்கடை நடத்துபவர்கள் 24 மணி நேரமும் கடையை திறந்து வைக்க முடியாத நிலை ஏற்படும்.
எனவே, சாமானிய வணிகர்களும் பயன்பெறும் வகையில் இந்த அரசாணையில் திருத்தம் செய்யப்பட வேண்டும். அதேபோன்று காவல்துறையினரின் அத்துமீறல் இல்லாத வகையில் அரசு பார்த்துக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பெரம்பலூரில் டீக்கடை- உணவகம் நடத்தி வரும் செல்லப்பிள்ளை கூறுகையில், வணிகர்களின் நீண்ட நாள் கோரிக்கையான 24 மணி நேரமும் கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்தது வரவேற்கத்தக்கது. இதனால் பஸ் நிலையத்தில் பயணிகள் இரவில் தேநீர், உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க வழிவகுக்கும். இந்த நடைமுறையை 3 ஆண்டுகள் என்பதை நீட்டிப்பு செய்ய வேண்டும் என்றார்.
பெரம்பலூர் மாவட்ட வணிகர் நலச் சங்கத்தின் தலைவர் நடராஜன் கூறுகையில், 24 மணி நேரம் கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்ததற்கு வணிகர்களின் சார்பாக வரவேற்கிறோம். இதற்காக அரசுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். மேலும் இரவு நேரத்தில் திறந்திருக்கும் கடைகளுக்கும், அங்கு வேலை பார்க்கும் ஊழியர்களுக்கும், பொருட்கள் வாங்க வரும் பொதுமக்களுக்கும் அரசு பாதுகாப்பு ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்றார்.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையின் பெரம்பலூர் மாவட்ட தலைவர் சண்முகநாதன் கூறுகையில், முன்பெல்லாம் பண்டிகை நாட்களில் இரவு நேரத்தில் வியாபாரத்திற்காக கடைகள் திறந்திருந்தால், போலீசார் கடைகளை அடைக்க சொல்வார்கள். தற்போது கடைகள்- வர்த்தக நிறுவனங்கள் 24 மணி நேரமும் திறந்திருக்க அரசு அனுமதி அளித்துள்ளது வரவேற்கத்தக்கது. இதனால் இரவு நேரத்தில் ஆட்கள் நடமாட்டம் இருக்கும் என்பதால் குற்ற சம்பவங்கள் நடைபெறுவது குறையும். 24 மணி நேரமும் தொழில் நிறுவனங்கள் இயங்குவதால் தமிழகத்தில் தொழில் வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பை அதிகரிக்கச் செய்யும். மேலும் 24 மணி நேரமும் திறந்திருக்கும் ஓட்டல்கள், டீக்கடை, மருந்து கடைகள் ஆகியவை பயணிகள், பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றார்.
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் நான்கு ரோட்டில் உள்ள பட்டாணிக் கடை உரிமையாளர் மனோகரன் கூறுகையில், ஜெயங்கொண்டத்தில் 24 மணி நேரமும் கடை இருப்பதால் போலீசாருக்கு கூடுதல் பணிச்சுமை ஆகும். மேலும் முன்பு எல்லாம் கடைகள் இருந்தபோது அதிகமான குற்றங்கள் நடைபெற்றதால் 10 முதல் 11 மணிக்குள் கடைகள் அடைக்கப்பட்டு வெறிச்சோடி காணப்படும். அவ்வாறு அடைக்கப்படாத கடைகளில் போலீசார் சென்று கடைகளை அடைத்து விட்டு வீடு செல்லுமாறு அறிவுறுத்தினர். தொடர்ந்து கடைவீதி மற்றும் அனைத்து பகுதிகளிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். இதனால் திருட்டு குடிபோதையில் தகராறு உள்ளிட்ட அனாவசியமான பிரச்சினைகள் தவிர்க்கப்பட்டது.
தற்போது இந்த அறிவிப்பால் கடைகளை திறந்தால் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு வியாபாரம் ஒன்றும் பெரிதாக நடக்க வாய்ப்பில்லை. தற்போது நடைபெறும் குற்றங்களை தடுக்கவும், குற்றச் செயல்களில் ஈடுபடுவோரின் மீது நடவடிக்கை எடுப்பது உள்ளிட்டவற்றை தடுக்க போலீசார் மிக குறைவாக உள்ளதால் தற்போது போலீசாருக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. மேலும் போலீசாருக்கு கூடுதல் பணிச் சுமையே பெரிய பெரிய நகரங்களுக்கு இது பொருந்தும் ஜெயங்கொண்டத்திற்கு இது பொருந்தாது என்றார்.
அரியலூர் நகர வணிகர் சங்க தலைவர் ராமலிங்கம் கூறுகையில், தமிழக அரசு வணிக நிறுவனங்கள் 24 மணி நேரமும் கடைகளை திறந்து வியாபாரம் செய்ய அனுமதி அளித்துள்ளது வரவேற்கத்தக்கது. சென்னை, மதுரை, கோவை, சேலம், திருச்சி போன்ற பெரும் நகரங்களில் ஓட்டல்கள், தங்கும் விடுதி மற்றும் அத்தியாவசிய பொருட் கள் விற்பனை செய்ய இது உதவியாக இருக்கும். தேசிய நெடுஞ்சாலைகளில் உணவு விடுதிகள் இரவு 10 மணிக்கு மேல் இனி தடையின்றி இயங்கலாம். அரியலூர் போன்ற சிறிய நகராட்சிகளில் அதிக அளவில் கடைகள் திறந்து இருக்க வாய்ப்பு இல்லை என்றார்.
ஜெயங்கொண்டத்தில் கே.ஆர்.டி. டி.வி.எஸ். கம்பெனி உரிமையாளர் ராஜன் கூறுகையில், இதுதொடர்பாக மின்சார பில் மற்றும் லேபர் உள்ளிட்ட செலவினங்கள் மட்டுமே ஆகுமே தவிர வியாபாரங்கள் பெரிதாக ஒன்றும் இருக்க வாய்ப்பில்லை. ஜவுளிக்கடை, நகைக்கடை, மளிகை கடை போன்ற கடைகளில் மட்டுமே சுமாரான வியாபாரம் இருந்து வருமே தவிர மற்ற கடைகளில் வியாபாரம் நடைபெற வாய்ப்பில்லை. டீக்கடை, பெட்டிக்கடை உள்ளிட்ட கடைகளில் ஓரளவு வியாபாரம் இருக்கும். விசேஷ நாட்களில் மட்டுமே முழு நேர கடையில் ஓரளவு லாபம் இருக்கும் என்றார்.

Related Tags :
Next Story