மின்சாரம் வினியோகம் செய்யக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட முயற்சி
மின்சாரம் வினியோகம் செய்யக்கோரி நேற்று மாலை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட கிராம மக்கள் ஒன்று கூடினர்.
கீழப்பழுவூர்,
அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட குலமாணிக்கம் கிராமத்தில் கடந்த 4 நாட்களாக முத்து மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இடி மின்னலுடன் மழை பெய்தது. அப்போது மின்னல் தாக்கியதில் 5-க்கும் மேற்பட்ட மின்கம்பங்களில் பழுது ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் மின்சாரம் தடைபட்டது. இதனை திருமானூர் உதவி மின் செயற்பொறியாளர் வில்சன் தலைமையிலான குழுவினர் கடந்த 2 நாட்களாக சரி செய்து வருகின்றனர். இந்த நிலையில் உடனடியாக மின்சாரம் வினியோகம் செய்யக்கோரி நேற்று மாலை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட கிராம மக்கள் ஒன்று கூடினர். இதுகுறித்து தகவல் அறிந்த வெங்கனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிங்காரவேலன் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் நாராயணன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படவே மறியல் போராட்டத்தில் ஈடுபடாமல் அவர்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Tags :
Next Story