தமிழகத்தில் ‘நிபா’ வைரஸ் பரவாமல் தடுக்க கேரளாவை ஒட்டிய 7 மாவட்டங்களில் நடமாடும் மருத்துவ குழுக்கள் அமைச்சர் தகவல்


தமிழகத்தில் ‘நிபா’ வைரஸ் பரவாமல் தடுக்க கேரளாவை ஒட்டிய 7 மாவட்டங்களில் நடமாடும் மருத்துவ குழுக்கள் அமைச்சர் தகவல்
x
தினத்தந்தி 7 Jun 2019 4:30 AM IST (Updated: 7 Jun 2019 1:50 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் ‘நிபா’ வைரஸ் பரவாமல் தடுக்க கேரளாவை ஒட்டியுள்ள 7 மாவட்டங்களில் நடமாடும் மருத்துவ குழுக்கள் அமைக்கப்பட்டு இருப்பதாக அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் கூறினார்.

திருச்சி,

மழைக்காலம் வந்தாலே தட்பவெப்ப நிலை மாற்றத்துக்கு ஏற்ப நோய் தொற்று பரவக்கூடிய வாய்ப்பு ஏற்படும். அதனால் தான் தேவையான தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். அண்டை மாநிலங்களில் ‘நிபா’ வைரஸ் தொற்று இருக்கிறபோது, தமிழகத்தில் அது பரவாமல் தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக கேரளாவை ஒட்டியுள்ள கன்னியாகுமரி, தேனி, திருப்பூர், கோவை உள்பட 7 மாவட்டங்களில் நடமாடும் மருத்துவ குழுக்களை ஏற்படுத்தி உள்ளோம். கேரள மாநிலத்தில் இருந்து தமிழகம் வருபவர்கள் மருத்துவ பரிசோதனை செய்யப்படுகிறார்கள். மேலும், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் துண்டு பிரசுரங்களும் வினியோகிக்கப்பட்டு வருகிறது.

யாருக்காவது காய்ச்சல் இருப்பது தெரிந்தால் உடனடியாக அவர்களது மருத்துவ அறிக்கையை கட்டுப்பாட்டு அறை கொடுக்க வேண்டும் என்று கூறி இருக்கிறோம். இதுகுறித்து அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் சுகாதாரத்துறை செயலர் மூலமாக கடிதம் எழுதி இருக்கிறோம். பொதுமக்கள் காய்கறிகளையும், பழங்களையும் கழுவிய பிறகு தான் பயன்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பத்தை ஆன்லைன் மூலம் நாளை (இன்று) முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு பல்நோக்கு மருத்துவமனை வளாகத்தில் நேரடியாக நடைபெறும். எப்போதும் போல 3 அல்லது 4 நாட்கள் கலந்தாய்வு நடத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story