தர்மபுரி மாவட்டத்தில் ஏரிகளில் மழைநீர் தேங்குவதை தடுக்கும் முள் மரங்கள் அகற்றப்படுமா? பொதுமக்கள் கோரிக்கை
தர்மபுரி மாவட்டத்தில் உள் ஏரிகளில் மழைநீர் தேங்குவதை தடுக்கும் முள்மரங்களை அகற்ற அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
தர்மபுரி,
தர்மபுரி மாவட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட ஏரிகள் உள்ளன. மானாவாரி பயிர் சாகுபடி அதிகமுள்ள இந்த மாவட்டத்தில் மழைக்காலங்களில் ஏரிகளில் தேங்கி வைக்கப்படும் நீரின் மூலம் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் வாய்ப்பு ஏற்படுகிறது. இந்த நிலையில் தர்மபுரி மாவட்டத்தில் இந்த ஆண்டு பருவமழை பொய்த்ததாலும், கடும் வறட்சியாலும் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான ஏரிகள் தண்ணீரின்றி வறண்டு உள்ளன.
குறிப்பாக பெரிய ஏரிகளான அன்னசாகரம் ஏரி, கிருஷ்ணாபுரம் ஏரி, புலிகரை ஏரி, சோகத்தூர் ஏரி உள்ளிட்டவை கடும் வறட்சியில் சிக்கி உள்ளது. இந்த நிலையில் கடந்த 2 வாரங்களாக தர்மபுரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கோடை மழை பரவலாக பெய்து உள்ளது. இருந்த போதிலும் மழைநீர் ஏரிகளுக்கு குறிப்பிடத்தக்க அளவில் சென்று சேரவில்லை. பெரும்பாலான ஏரிகளில் அடர்ந்து வளர்ந்துள்ள முள்மரங்கள் மழைநீர் தேங்கும் பரப்பளவில் பெரும்பகுதியை ஆக்கிரமித்து உள்ளன.
இதனால் ஏரிகளில் தண்ணீரை தேங்கும் பரப்பளவு படிப்படியாக அளவு குறைந்து வருகிறது. ஏரிகளுக்கு மழைநீர் வரும் கால்வாய்களும் தூர்ந்து போய் இருப்பதால் மழைநீர் ஏரிகளை சென்றடைவதில் பிரச்சினைகள் ஏற்பட்டு உள்ளன.
இதற்கு தீர்வு காண முள்மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ள ஏரிகளை கணக்கெடுப்பு செய்து அங்குள்ள முள்மரங்களை அகற்றவும், ஏரிகளை தூர்வாரி சீரமைக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து உள்ளது.
இதுதொடர்பாக தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள், பொதுமக்கள் கூறியதாவது:-
தர்மபுரி மாவட்டத்தில் கடந்த காலத்தில் விவசாய நீர்பாசனத்தில் ஏரிகள் முக்கிய பங்கு வகித்து வந்தன. கடந்த சில ஆண்டுகளாக ஏரிகளில் முள்மரங்கள் அதிக அளவில் வளர்ந்து இருப்பதால் ஏரிகளில் மழைநீரை போதிய அளவில் தேக்கி வைக்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. சில ஏரிகளில் முள்மரங்கள் அகற்றப்பட்டு இருந்தபோதிலும் பெரும்பாலான ஏரிகளில் முள்மரங்களின் ஆக்கிரமிப்பு அப்படியே உள்ளது. இதனால் தர்மபுரி மாவட்டத்தில் தற்போது கோடைமழை பெய்தும் ஏரிகளில் குறிப்பிடத்தக்க அளவில் தண்ணீரை தேக்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.
மழையின்போது கிடைக்கும் நீரை ஏரிகளில் முறையாக தேக்கினால் அதன் மூலம் ஓரளவிற்கு விவசாய பணிகளை மேற்கொள்ள முடியும். ஏரிகளில் தண்ணீர் தேங்கியிருந்தால் சுற்றுவட்டார பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டமும் அதிகரிக்கும். எனவே தர்மபுரி மாவட்டத்தில் முள் மரங்கள் அதிகம் உள்ள ஏரிகளை கண்டறிந்து அங்குள்ள முள்மரங்களை அகற்றவும், ஏரிகளுக்கு மழைநீர் செல்வதற்கான நீர்வழிப்பாதைகளை சீரமைக்கவும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்
இவ்வாறு விவசாயிகள் தெரிவித்தனர்.

Related Tags :
Next Story