சிறுமியை கற்பழித்தவருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை உடந்தையாக இருந்த பெண்ணுக்கும் ஜெயில்


சிறுமியை கற்பழித்தவருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை உடந்தையாக இருந்த பெண்ணுக்கும் ஜெயில்
x
தினத்தந்தி 7 Jun 2019 2:40 AM IST (Updated: 7 Jun 2019 2:40 AM IST)
t-max-icont-min-icon

சிறுமியை கற்பழித்தவர் மற்றும் உடந்தையாக இருந்த பெண்ணுக்கு தலா 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

மும்பை,

புனே சிரூர் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி தனக்கு அறிமுகமான லலிதா மற்றும் தத்தா பார்டே ஆகியோருடன் கடந்த 2013-ம் ஆண்டு ஜனவரி 20-ந்தேதி காட்டுக்கு விறகு சேகரிக்க சென்றிருந்தாள்.

அப்போது, சிறுமி மீது தத்தா பார்டேவுக்கு மோகம் உண்டானது. அவர் லலிதாவிடம், அவளை உல்லாசத்துக்கு சம்மதிக்க வைக்கும்படி கூறினார்.

அதன்பேரில் லலிதா சிறுமியிடம் சென்று தத்தா பார்டே உன்னுடன் உல்லாசமாக இருக்க ஆசைப்படுகிறார் என கூறியிருக்கிறார். இதைக்கேட்டு சிறுமி அதிர்ச்சி அடைந்தாள்.

7 ஆண்டு ஜெயில்

இதையடுத்து சிறுமி இருவரையும் சத்தம் போட்டாள். இந்த நிலையில், தத்தா பார்டே சிறுமியை காட்டுக்குள் வைத்து பலவந்தமாக கற்பழித்தார். இதற்கு லலிதா உடந்தையாக இருந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் தத்தா பார்டே, லலிதா ஆகியோரை கைது செய்து சிறுவர், சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு விசாரணை நிறைவில் இருவர் மீதான குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்பட்டது. இதையடுத்து தீர்ப்பு கூறிய சிறப்பு கோர்ட்டு, சிறுமியை கற்பழித்த தத்தா பார்டே, உடந்தையாக இருந்த லலிதா ஆகிய இருவருக்கும் தலா 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டது.

Next Story