கூடுவாஞ்சேரி ரெயில்நிலையம் அருகே சுரங்கப்பாதை பணியை விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை
கூடுவாஞ்சேரி ரெயில்நிலையம் அருகே சுரங்கப்பாதை பணியை விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வண்டலூர்,
காஞ்சீபுரம் மாவட்டம் கூடுவாஞ்சேரி ரெயில் நிலையம் அருகே கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னர் ரெயில்வே கேட் இருந்தது. இந்த ரெயில்வே கேட் அடிக்கடி மூடப்படுவதால் கூடுவாஞ்சேரியில் இருந்து மாடம்பாக்கம், ஆதனூர், காவனூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளானார்கள்.
இதனால் மாடம்பாக்கம், ஆதனூர் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து செல்லும் பொதுமக்கள் ஒரு கிலோமீட்டர் தூரம் சுற்றி வந்து கூடுவாஞ்சேரி ஜி.எஸ்.டி. சாலைக்கு செல்ல வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சுரங்கப்பாதை பணி நடைபெறும் இடத்தில் ஆய்வு செய்து பணியை விரைவாக முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதனையடுத்து ரெயில்வே கேட்டை மூடிவிட்டு அந்த இடத்தில் சுரங்கப்பாதை அமைக்கும் பணி கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கப்பட்டது. ஆனால் சுரங்கப்பாதை பணி மிகவும் மந்தமான நிலையில் ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது.
இதனால் மாடம்பாக்கம், ஆதனூர் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து செல்லும் பொதுமக்கள் ஒரு கிலோமீட்டர் தூரம் சுற்றி வந்து கூடுவாஞ்சேரி ஜி.எஸ்.டி. சாலைக்கு செல்ல வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சுரங்கப்பாதை பணி நடைபெறும் இடத்தில் ஆய்வு செய்து பணியை விரைவாக முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story