தனியார் நிறுவன ஊழியருக்கு அடி-உதை; அண்ணன், தம்பி கைது


தனியார் நிறுவன ஊழியருக்கு அடி-உதை; அண்ணன், தம்பி கைது
x
தினத்தந்தி 7 Jun 2019 3:18 AM IST (Updated: 7 Jun 2019 3:18 AM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூர் அருகே தனியார் நிறுவன ஊழியருக்கு அடி-உதை விழுந்தது. இது தொடர்பாக அண்ணன், தம்பி கைது செய்யப்பட்டனர்.

திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த செவ்வாப்பேட்டை புதிய காலனி காமராஜர் தெருவை சேர்ந்தவர் சந்தோஷ்குமார் (வயது 33). தனியார் நிறுவன ஊழியர். நேற்று முன்தினம் சந்தோஷ்குமார் தன் வீட்டின் அருகே உள்ள கடைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த அதே பகுதியை சேர்ந்த தினேஷ் (27), அவரது சகோதரர் விஷால் (25) ஆகியோர் ஏற்கனவே தங்களுக்குள் இருந்த முன்விரோதத்தை மனதில் வைத்துக்கொண்டு அவரை தகாத வார்த்தையால் பேசி, அடித்து உதைத்து கையாலும் கல்லாலும் தாக்கியுள்ளனர்.

இதுகுறித்து சந்தோஷ்குமார் செவ்வாப்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் சகோதரர்களான தினேஷ், விஷால் ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

திருவள்ளூரை அடுத்த பேரம்பாக்கம் அருகே உள்ள கீழச்சேரி பள்ளக்காலனியை சேர்ந்தவர் ஆண்டியப்பன். இவரது மகன் மணிகண்டன் (24). நேற்று முன்தினம் கீழச்சேரி கங்கையம்மன் கோவிலில் நடைபெற்று வரும் திருவிழாவையொட்டி நடைபெற்ற தெருக்கூத்து தொடர்பாக ஏற்பட்ட தகராறில் மணிகண்டனை கீழச்சேரி காலனி பகுதியை சேர்ந்த சங்கர், சந்தோஷ், செல்வராஜ், முனுசாமி, சிவராசு ஆகியோர் தகாத வார்த்தையால் பேசி தாக்கியுள்ளனர்.

இது குறித்து மணிகண்டன் மப்பேடு போலீசில் புகார் செய்தார்.

போலீசார் மேற்கண்ட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story