திருமணத்துக்கு மாப்பிள்ளை மறுத்ததால் நர்சு தற்கொலை முயற்சி
திருமணத்துக்கு மாப்பிள்ளை மறுத்ததால் நர்சு தற்கொலை முயற்சி செய்துள்ளார்.
ஓமலூர்,
காடையாம்பட்டி கள்ளிக்காடு பகுதியை சேர்ந்தவர் கந்தசாமி. இவருடைய மகள் ஜனனி (வயது 21). இவர் தனியார் மருத்துவமனையில் நர்சாக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் ஜனனிக்கும், தளவாய்பட்டி பகுதியை சேர்ந்த பொக்லைன் எந்திர உரிமையாளர் ஒருவருக்கும், கடந்த ஏப்ரல் மாதம் 22-ந் தேதி திருமணம் நிச்சயிக்கப்பட்டது. அதன்படி ஜூன் மாதம் 6-ந் தேதி (நேற்று) திருமணம் நடைபெறுவதற்கான ஏற்பாடுகளை ஜனனி குடும்பத்தினர் செய்து வந்தனர். இந்த நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு 7 பவுன் நகை வரதட்சணையாக கொடுத்தால் தான் திருமணம் செய்து கொள்வேன் என்று மாப்பிள்ளை கூறியதாக தெரிகிறது. இது குறித்து புகார் தெரிவிக்க ஜனனியும், அவரது தாயாரும் ஓமலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு நேற்று முன்தினம் வந்தனர். அங்கு மாப்பிள்ளை வீட்டார் 7 பவுன் நகை வரதட்சணை கேட்பதாக புகார் அளித்தனர்.

அதன்பேரில், தளவாய்பட்டியை சேர்ந்த பொக்லைன் எந்திர உரிமையாளரை அழைத்து போலீசார் விசாரித்தனர். அப்போது அவர் திருமணம் செய்து கொள்ள திட்டவட்டமாக மறுத்துள்ளார். இதனால் மனம் உடைந்த ஜனனி, விஷம் குடித்து மயங்கினார். பின்னர் உயிருக்கு ஆபத்தான நிலையில் ஓமலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட அவர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நர்சு தற்கொலை முயற்சி குறித்து தீவட்டிப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story