தூத்துக்குடியில் தொழிலாளர் நலவாரிய நலத்திட்டம் குறித்த கண்காணிப்பு குழு கூட்டம்
தூத்துக்குடியில் தொழிலாளர் நலவாரிய நலத்திட்டம் குறித்த கண்காணிப்பு குழு கூட்டம், கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமையில் நடந்தது.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தொழிலாளர் நலத்துறை (சமூக பாதுகாப்பு திட்டம்) மூலம் தமிழ்நாடு கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர் நலவாரியங்களின் நலத்திட்டங்கள் தொழிலாளர்களை விரைவாக சென்றடைவதை கண்காணிக்க உருவாக்கப்பட்ட மாவட்ட அளவிலான கண்காணிப்பு குழு கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கினார். தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) பாலமுருகன் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் கலெக்டர் சந்தீப் நந்தூரி பேசுகையில், தமிழ்நாடு கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர் நலவாரிய அலுவலகம் கோரம்பள்ளத்தில் உள்ள ஒருங்கிணைந்த தொழிலாளர் நலத்துறை அலுவலக கட்டிடத்தில் இயங்குகிறது. புதிய கட்டிடத்திற்கு தேவையான அடிப்படை வசதிகளை விரைவாக செய்து முடித்து தரப்படும். தொழிற்சங்க பிரதிநிதிகளால் வைக்கப்பட்ட நலவாரிய நலத்திட்டங்கள் தொடர்பான கோரிக்கைகள் தொடர்பாக தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று கூறினார்.
கூட்டத்தில் மாவட்ட சமூக நல அலுவலர் தனலட்சுமி, மாவட்ட பஞ்சாயத்துகள் உதவி இயக்குனர் உமாசங்கர், நிர்வாக தரப்பு பிரதிநிதிகள் செல்வராஜ், செல்வஜார்ஜ், தொழிற்சங்க பிரதிநிதிகள் அருணாசலம் (ஏ.டி.பி), கிருஷ்ணவேணி (சி.ஐ.டி.யு), ராஜூ (ஐ.என்.டி.யு.சி), சிவராமன் (ஏ.ஐ.சி.சி.டி.யு.), வேலாயுதம் (இந்திய மஸ்தூர் சபா) மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story