சேலத்தில் 3 பிளாஸ்டிக் தொழிற்சாலைகள் மூடல் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் நடவடிக்கை


சேலத்தில் 3 பிளாஸ்டிக் தொழிற்சாலைகள் மூடல் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் நடவடிக்கை
x
தினத்தந்தி 8 Jun 2019 4:15 AM IST (Updated: 7 Jun 2019 11:21 PM IST)
t-max-icont-min-icon

சேலத்தில் 3 பிளாஸ்டிக் தொழிற்சாலைகளை மூடி மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

சேலம், 

தமிழகத்தில் ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியக்கூடிய மக்காத தன்மை கொண்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து சேலத்தில் வணிக நிறுவனங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தி, பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர். இந்த நிலையில் சேலம் பள்ளப்பட்டி, செவ்வாய்பேட்டை ஆகிய பகுதிகளில் அரசு உத்தரவை மீறி தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் இயங்கி வருவதாக சேலம் மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து புகார் வந்த 3 தொழிற்சாலைகளுக்கும் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் கோபாலகிருஷ்ணன் தலைமையில் அதிகாரிகள் சென்று சோதனை நடத்தினர். அப்போது அங்கு பிளாஸ்டிக் பைகள் தயாரித்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து அந்த தொழிற்சாலையில் உற்பத்தியை நிறுத்தி வைக்க அதிகாரிகள் உத்தரவிட்டனர். மேலும் இந்த தொழிற்சாலைகளை மூடுவதற்கு சென்னையில் உள்ள மாசுகட்டுப்பாட்டு வாரியத்துக்கு பரிந்துரை செய்யப்பட்டது.

இந்த நிலையில் உயர் அதிகாரிகளின் உத்தரவின் பேரில் அந்த 3 தொழிற்சாலைகளை மூடியும், மின் இணைப்பை துண்டித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

Next Story