ஆத்தூரில் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலைமறியல்


ஆத்தூரில் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலைமறியல்
x
தினத்தந்தி 8 Jun 2019 3:00 AM IST (Updated: 7 Jun 2019 11:23 PM IST)
t-max-icont-min-icon

ஆத்தூரில் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

ஆத்தூர், 

ஆத்தூர் நகரசபை 30-வது வார்டு மந்தைவெளி நடு பெரியார் தெரு பகுதிக்கு நேற்று மாலை நகரசபை சார்பில் குழாய் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. அப்போது ஒரு ஒரு பகுதியை சேர்ந்த 10 வீடுகளுக்கு சீரான குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை எனவும், குறைந்த அளவு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டதாகவும் கூறி ஆண்களும், பெண்களும் என 20-க்கும் மேற்பட்டோர் காலிக்குடங்களுடன் ஆத்தூர் லீ பஜார் பகுதிக்கு நேற்று மாலை திரண்டு வந்தனர்.

அங்கு அவர்கள் திடீரென சாலைமறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் கிடைத்ததும், ஆத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) முருகேசன், நகரசபை பணி மேற்பார்வையாளர் தேவி மற்றும் போலீசார், அரசு அலுவலர்கள் விரைந்து சென்று நாளை(இன்று) காலை சீரான குடிநீர் வினியோகம் செய்யப்படும் என உறுதி அளித்தனர். இதை தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்

இதனால் அந்த சாலையில் சுமார் 15 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story