குளித்தலையில் மழலையர் வகுப்புகளை கலெக்டர் ஆய்வு
குளித்தலையில் மழலை யர் வகுப்புகளை கலெக்டர் அன்பழகன் ஆய்வு செய்தார்.
குளித்தலை,
கரூர் மாவட்டம் குளித்தலை வட்டம் பொய்யாமணி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மற்றும் திருச்சாப்பூர் அரசு நடுநிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளில் மாவட்ட கலெக்டர் அன்பழகன் நேற்று முன்தினம் நேரில் ஆய்வு செய்தார். இதில், பொய்யாமணி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தன்னார்வலர்கள், முன்னாள் மாணவர்கள், ஊர்பொதுமக்களின் பங்களிப்போடு மாணவ-மாணவிகளுக்கு ஸ்மார்ட் வகுப்பறைகள், குளிரூட்டப்பட்ட வகுப்பறைகள், நூலகம் என பல்வேறு வசதிகள் செய்யப்பட்டிருப்பதை பார்வையிட்ட மாவட்ட கலெக்டர் அப்பள்ளிக்கு நிதியுதவி வழங்கிவரும் அனைவரையும் பாராட்டினார். பின்னர் பொய்யாமணி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தொடங்கப்பட்டுள்ள மழலையர் வகுப்புகளையும் மாவட்ட கலெக்டர் பார்வையிட்டார்.
பின்னர் பள்ளி குழந்தைகளுடன் கலந்துரையாடிய மாவட்ட கலெக்டர் அன்பழகன், “உங்கள் வாழ்வில் இனிய தொடக்கமாக இந்தப் பள்ளிகாலம் அமையும். நாளை நமதே! நாளும் நமதே! என்ற வார்த்தைகளை உங்கள் மனதில் பதித்து தன்னம்பிக்கையுடன் படித்து வாழ்வில் வெற்றிபெற வேண்டும் என்று வாழ்த்தினார்.
அதனைத்தொடர்ந்து திருச்சாப்பூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியிலும் மாவட்ட கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.இந்த நிகழ்வின்போது குளித்தலை வருவாய் கோட்டாட்சியர் லியாகத், வட்டாரக் கல்வி அலுவலர் ராஜலட்சுமி, தலைமை ஆசிரியர்கள் முத்துலட்சுமி(பொய்யாமணி), துரை(திருச்சாப்பூர்) உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story