ரேஷன் கார்டில் பெயர் சேர்க்க-நீக்க சென்னையில், மக்கள் குறைதீர்க்கும் முகாம் இன்று நடக்கிறது
சென்னையில் ரேஷன் கார்டில் பெயர் சேர்க்க-நீக்க மக்கள் குறைதீர்க்கும் முகாம் இன்று நடக்கிறது.
சென்னை,
குடும்ப அட்டையில் மாற்றங்கள் செய்தல் மற்றும் பொது வினியோக திட்டத்தில் காணப்படும் குறைபாடுகள் குறித்து தமிழகம் முழுவதும் வட்டங்கள் வாரியாக மக்கள் குறைதீர்க்கும் முகாம் மாதந்தோறும் நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி இந்த மாதத்துக்கான மக்கள் குறைதீர்க்கும் முகாம் சென்னையில் உள்ள 17 மண்டல உதவி கமிஷனர் அலுவலகங்களில் இன்று (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறவுள்ளது. இதில் ரேஷன் அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம் மற்றும் செல்போன் எண் பதிவு செய்தல் போன்ற மாற்றங்களையும், ரேஷன் கடைகளின் செயல்பாடுகள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் தரம் குறித்த புகார்கள், தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட் கள் அல்லது சேவைகளில் குறைபாடுகள் குறித்த புகார்கள் குறித்து தெரிவிக்கலாம்.
மேற்கண்ட தகவல் தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story