குடிநீர் வாரிய குறைதீர்க்கும் கூட்டம் 15 பகுதி அலுவலகங்களில் நடக்கிறது


குடிநீர் வாரிய குறைதீர்க்கும் கூட்டம் 15 பகுதி அலுவலகங்களில் நடக்கிறது
x
தினத்தந்தி 8 Jun 2019 3:45 AM IST (Updated: 8 Jun 2019 2:11 AM IST)
t-max-icont-min-icon

சென்னையில் குடிநீர் வாரியம் சார்பில் திறந்தவெளி கூட்டம் இன்று நடைபெறுகிறது.

சென்னை,

சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

சென்னையில் குடிநீர் வாரியம் சார்பில் திறந்தவெளி கூட்டம் இன்று (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை குடிநீர் வாரிய 15 பகுதி அலுவலகங்களில் நடைபெறுகிறது.

இந்த கூட்டத்தில் பொதுமக்கள் பங்கேற்று குடிநீர், கழிவுநீர் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள், குடிநீர், கழிவுநீர் வரி மற்றும் கட்டணங்கள், நிலுவையில் உள்ள குடிநீர், கழிவுநீர் புதிய இணைப்புகள் தொடர்பான சந்தேகங்களை நேரில் மனுக்கள் வாயிலாக தெரிவித்து பயன்பெறலாம்.

மேலும் மழைநீர் சேகரிப்பு மற்றும் பராமரிப்பு தொடர்பான விளக்கங்களையும் இந்த கூட்டத்தின் வாயிலாக தெரிந்துகொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story