சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே 16-ந் தேதி அயோத்தி பயணம் 18 எம்.பி.க்களுடன் செல்கிறார்
சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தனது 18 எம்.பி.க்களுடன் 16-ந் தேதி அயோத்தி செல்கிறார்.
மும்பை,
நாடாளுமன்ற தேர்தலில் மராட்டியத்தில் பா.ஜனதா, சிவசேனா கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. இதில் சிவசேனா 23 தொகுதிகளில் போட்டியிட்டு 18 இடங்களில் அபார வெற்றி பெற்றது. இதையடுத்து சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தனது 18 எம்.பி.க்களுடன் நேற்று முன்தினம் மராட்டியத்தில் உள்ள பிரசித்தி பெற்ற மகாலட்சுமி கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். இதேபோல அனைத்து எம்.பி.க்களுடன் அவர் அடுத்த வாரம் அயோத்தி பயணிக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. அதன்படி அவர்கள் வருகிற 16-ந் தேதி அயோத்தி செல்ல இருப்பதாக சிவசேனா கட்சியின் மூத்த தலைவரும், ராஜ்யசபா எம்.பி.யுமான சஞ்சய் ராவத் நேற்று தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்தார்.
அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வலியுறுத்தி உத்தவ் தாக்கரே கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அங்கு சென்றிருந்தார். இந்த நிலையில் மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் மீண்டும் அரசு பதவி ஏற்ற பிறகு, முதல் நாடாளுமன்ற கூட்டத் தொடர் வருகிற 17-ந் தேதி தொடங்குகிறது. அதற்கு ஒரு நாள் முன்னதாக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே சர்ச்சைக்குரிய அயோத்திக்கு எம்.பி.க்களுடன் பயணிக்க இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story