ஆசிரியர் தகுதி தேர்வு முதல் தாள்: மாவட்டத்தில் 19 மையங்களில் 7,236 பேர் எழுதினர்
ஆசிரியர் தகுதி தேர்வின் முதல் தாளை மாவட்டத்தில் 19 மையங்களில் 7,236 பேர் எழுதினர்.
சேலம்,
தமிழகத்தில் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதி தேர்வு ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் நடத்தப்பட்டு வருகிறது. இந்தாண்டுக்கான ஆசிரியர் தகுதி தேர்வின் முதல் தாள் தேர்வு தமிழகத்தில் நேற்று நடைபெற்றது.
அதன்படி, சேலம் மாவட்டத்தில் முதல் தாளை எழுதுவதற்காக 8,227 பேர் விண்ணப்பித்திருந்தனர். இவர்களுக்காக மாவட்டத்தில் 19 மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.
ஆசிரியர் தகுதி தேர்வின் முதல் தாளை எழுதுவதற்காக ஏராளமான தேர்வர்கள் தேர்வு மையங்களுக்கு காலை 8 மணிக்கு முன்பாகவே வந்தனர். இதையடுத்து அவர்கள் தேர்வு மையங்களுக்கு சென்று அமர்ந்தனர். செல்போன், மடிக்கணினி, கால்குலேட்டர் உள்ளிட்ட கருவிகள் மையத்துக்குள் கொண்டு செல்ல அனுமதிக்கப்பட வில்லை. இதுதொடர்பாக மையங்களின் முன்பு அறிவிப்பு பலகையில் நோட்டீஸ் ஒட்டப்பட்டிருந்தது.
சேலம் மாவட்டத்தில் ஆசிரியர் தகுதி தேர்வின் முதல் தாளை 7,236 பேர் எழுதினர். 991 பேர் தேர்வு எழுத வரவில்லை. தேர்வையொட்டி மையங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மாவட்டத்தில் 53 மையங்களில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) ஆசிரியர் தகுதி தேர்வின் 2-வது தாள் தேர்வு நடைபெறுகிறது. இதை எழுதுவதற்கு 22,168 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
Related Tags :
Next Story