‘நிபா’ காய்ச்சல் பாதிப்பு எதிரொலி: கேரளாவில் இருந்து குடகிற்கு பழங்கள் கொண்டு வர தடை மாவட்ட சுகாதார துறை அதிகாரி உத்தரவு


‘நிபா’ காய்ச்சல் பாதிப்பு எதிரொலி: கேரளாவில் இருந்து குடகிற்கு பழங்கள் கொண்டு வர தடை மாவட்ட சுகாதார துறை அதிகாரி உத்தரவு
x
தினத்தந்தி 9 Jun 2019 3:15 AM IST (Updated: 9 Jun 2019 12:11 AM IST)
t-max-icont-min-icon

‘நிபா’ காய்ச்சல் பாதிப்பு எதிரொலியாக கேரளாவில் இருந்து குடகிற்கு பழங்கள் கொண்டு வர தடை விதித்து மாவட்ட சுகாதார துறை அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.

குடகு,

கேரள மாநிலத்தில் ‘நிபா’ வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இந்த காய்ச்சலுக்கு ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் இந்த ‘நிபா’ காய்ச்சல் பக்கத்து மாநிலங்களான தமிழகம், கர்நாடகம் ஆகிய பகுதிகளுக்கும் பரவ வாய்ப்பு உள்ளதால், அந்த மாநில மக்களும் பீதியடைந்துள்ளனர். இதனால் ‘நிபா’ காய்ச்சலை தங்கள் மாநிலத்துக்குள் நுழைய விடாமல் தடுக்க தமிழக, கர்நாடக அரசுகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது.

கர்நாடத்தில் கேரள எல்லையில் உள்ள 7 மாவட்டங்களுக்கு மாநில அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால், அந்த மாவட்டங்களில் கூடுதல் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு, வாகனங்கள் தீவிர சோதனை செய்யப்படுகிறது.

பழங்கள் கொண்டுவர தடை

இந்த நிலையில் கேரள எல்லையில் இருக்கும் குடகு மாவட்டத்திலும் ‘நிபா’ காய்ச்சல் பரவலாம் என்று மக்கள் பீதியடைந்துள்ளனர். இதுகுறித்து குடகு மாவட்ட சுகாதார துறை அதிகாரி மோகன் கூறுகையில், குடகு மாவட்டத்தில் ‘நிபா’ காய்ச்சல் பாதிப்பு இல்லை. கர்நாடகத்தில் இந்த காய்ச்சல் பரவாமல் தடுக்க தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

இதனால் குடகு மாவட்டத்தில் கூடுதல் சோதனைச்சாவடிகள் அமைத்து ஒவ்வொரு வாகனங்களையும் தீவிரமாக சோதனை செய்து வருகிறோம். கேரளாவில் இருந்து குடகு மாவட்டத்துக்கு பழங்கள் கொண்டுவர தடை விதித்து உத்தரவிட்டுள்ளேன். இதனால் கேரளாவில் இருந்து பழங்கள் கொண்டு வரும் வாகனங்கள் அப்படியே திருப்பி அனுப்பப்படுகின்றன. இதனால் மக்கள் யாரும் பீதியடைய வேண்டாம் என்றார்.

Next Story