பெங்களூரு மாநகராட்சியில் ரூ.246 கோடி திட்டத்தில் முறைகேடு முதல்-மந்திரி குமாரசாமிக்கு, ராமலிங்கரெட்டி கடிதம்
பெங்களூரு மாநகராட்சியில் ரூ.246 கோடி திட்டத்தில் முறைகேடு நடந்திருப்பதாக முதல்- மந்திரி குமாரசாமிக்கு ராமலிங்கரெட்டி எம்.எல்.ஏ. கடிதம் எழுதியுள்ளார்.
பெங்களூரு,
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராமலிங்கரெட்டி. தனக்கு மந்திரி பதவி கிடைக்கவில்லை என்பதற்காக கட்சி தலைவர்கள் மீது அவர் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தி பரபரப்பை ஏற்படுத்தினார். இந்த நிலையில் பெங்களூரு மாநகராட்சியில் ஊழல் நடந்திருப்பதாக கூறி முதல்-மந்திரி குமாரசாமிக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-
பெங்களூருவில் ரூ.246 கோடி செலவில் குப்பைகளை நிர்வகிக்கும் மையங்களை பராமரிக்க 7 ஆண்டுகளுக்கு டெண்டர் விட மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இதில் பெரிய அளவில் முறைகேடு நடந்துள்ளன. அதனால் மாநகராட்சியின் இந்த முடிவை ரத்து செய்ய வேண்டும்.
தடை விதிக்க வேண்டும்
விதிமுறைகளின்படி டெண்டர் விட நடவடிக்கை எடுக்க வேண்டும். கருப்பு பட்டியலில் உள்ள நிறுவனங்களுக்கு டெண்டர் விடப்பட்டது ஏன்?. மாநகராட்சியில் நடந்துள்ள இந்த முறைகேடுகளுக்கு நீங்கள் தடை விதிக்க வேண்டும். அந்த டெண்டரில் நடந்துள்ள தவறுகளை சரிசெய்ய வேண்டும்.
இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
பெங்களூரு நகர வளர்ச்சித்துறை துணை முதல்-மந்திரி பரமேஸ்வரிடம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story